வகுப்பு 8 – அன்பு, இல்லத்தில் துவங்குகிறது

வகுப்பு 8 – அன்பு, இல்லத்தில் துவங்குகிறது

இறைவன் உனக்கு, அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, தாத்தா, பாட்டி, ஆசிரியர், நண்பர் என அனைவரையும் கொடுத்துள்ளார். அவர்கள் உன்னை நேசிக்கிறார்கள். நீயும் அவர்களை நேசிக்கிறாய். நீ அவர்களை நேசிக்கிறாய் என்பதை அவர்களுக்கு எவ்வாறு காட்டுகிறாய். அன்பு என்பது அனைவரும் சந்தோஷமாக இருப்பதுதான். உன்னுடைய அப்பாவும், அம்மாவும் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் உன்னை சந்தோஷமாக வைத்திருப்பதற்காக நிறைய நேரமும், பணமும் செலவழிக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் உன்னை மிகவும் நேசிக்கிறார்கள். இதை எப்போதும் நினைவில் வை. உன் அப்பாவையும், அம்மாவையும் சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய். எப்படி என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா? அவர்கள் கீழ்ப்படிந்து நட. சகோதர, சகோதரிகளை எப்படி சந்தோஷப்படுத்துவது? அவர்களோடு சண்டை போடாமல் இருப்பதுதான். நயமாக பேசுவதன் மூலம் உனது அன்பை அவர்களுக்கு காட்டமுடியும். தாத்தா பாட்டி உன்னை மிகவும் விரும்புகிறார்கள். அவர்களுடன் உனது நேரத்தை செலவழி. அவர்களுடன் ஒரு நடைபயிற்சி சென்றுவா. அவர்களிடம் கீழ்ப்படிந்து நட.

கதை : வீட்டில் அன்பு

அக்ஷய்யிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அவன் அந்த நாயை நேசித்தான். அது மிகவும் குரைக்கும். எனினும் அவன் அதை விரும்பினான். ஒரு நாள் அவன் சகோதரன் அனிலுக்கு உடல் நலம் குறைவானது. அவனுக்கு ஓய்வும் அமைதியும் தேவைப்பட்டது. ஆனால் அந்த நாய் வீட்டைச்சுற்றி குதித்துக் கொண்டும் குரைத்துக் கொண்டும் இருந்தது. அனில் இது பற்றி புகார் சொல்லவில்லை, ஏனெனில் அவனுக்குத் தெரியும், அவன் சகோதரன் அதை எவ்வளவு நேசிக்கிறான் என்று. அக்ஷய் அவனது சகோதரனை மிகவும் நேசித்தான். தற்போது அவனுக்கு ஓய்வு தேவை என்பதும் அவனுக்குத் தெரியும். எனவே அவன் தன் செல்ல நாயை தன் நண்பன் ஜெய்யிடம் கொண்டு சென்று, தன் சகோதரன் உடல் நலம் பெறும் வரை அதனைப் பாதுகாக்கக் கோரினான். தன் சகோதரனிடம் சென்று அவன் உடல் நலம் பெற்றதும் தன் செல்லத்தை கொண்டு வரலாம், என்று கூறினான்.