வகுப்பு 6 – இறைவனிடம் பேசுவது எப்படி

வகுப்பு 6 – இறைவனிடம் பேசுவது எப்படி
இறைவனிடம் பேசுதல் – பிரார்த்தனை
ஏ, பி, சி (A, B, C) கதை

ஒரு சிறுவன், மக்கள் அனைவரும், கிருத்துவ தேவாலயம், கோவில், குருத்வாரா, மற்றும் மசூதி ஆகியவற்றுக்குச் சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைக் கண்டான். அவனுக்கு எப்படிப் பிரார்த்தனை செய்வதென்று தெரியாது. அவர்கள் கூறிய பிரார்த்தனைகளும் அவனுக்குத் தெரியாது. ஆகவே, ஒரு நாள் அவன் தேவாலயம் சென்று கண்களை மூடி, A,B,C என்று தொடங்கி Z வரை முடித்தான்.

அவன் வெகு சந்தோஷமாக வீட்டுக்குத் திரும்பி தன் தாயிடம், “நான் இன்று தேவாலயம் சென்று எல்லோரையும் போல் எனது பிரார்த்தனையை செய்து முடித்தேன். கடவுளும் அதனை செவி மடுத்தார்” என்று கூறினான். அவன் தாய் அவனை அன்புடன் நோக்கி, “ஆனால் உனக்கு அந்த பிரார்த்தனைகள் தெரியாதே, நீ மிகவும் சிறுவனாயிற்றே. உன்னால் அவ்வளவு பெரிய பிரார்த்தனைகளை கற்க முடியாதே” என்று கூறினாள்.

சிறுவன் பதிலுரைத்தான் “அம்மா, நான் A,B,C,D…Z வரை கூறினேன்.” “ஆனால், அது அரிச்சுவடி அல்லவா, பிரார்த்தனையல்லவே!” என்று அம்மா கூறினாள். அதற்கு சிறுவன் கூறினான், “எனக்கு எதுவுமே தெரியாது, ஆனால் இறைவனுக்கு எல்லாமே தெரியும். ஆகவே அவர் அந்த எழுத்துக்களிலிருந்து தனக்குப் பிடித்த ஒரு பிரார்த்தனையை அமைத்துக்கொள்ள முடியும்.”

பாடல்

“Chota sa mandir banayenge”

சின்னஞ்சிறிய கோவில் கட்டுவோம், இறைவன் அங்கு வருவாரே(2) சந்தனத்தை கையிலெடுத்து ஸ்வாமிக்கு திலகம் வைப்போமே, இறைவன் வருவாரே சின்னஞ்சிறிய கோவில் கட்டுவோம், இறைவன் அங்கு வருவாரே அன்றலர்ந்த பூவெடுத்து அழகான மாலைகட்டி, ஆண்டவர்க்கு அணிவிப்போமே (இறைவன் ) சின்னஞ்சிறிய கோவில் கட்டுவோம், இறைவன் அங்கு வருவாரே(2) அழகான பட்டெடுத்து ஊஞ்சல் கட்டி ஆட்டுவோம் இறைவன் அங்கு வருவாரே சின்னஞ்சிறிய கோவில் கட்டுவோம், இறைவன் அங்கு வருவாரே(2) சின்னஞ்சிறு கோயில்…