வகுப்பு 49 – பிரச்சனைக்கான தீர்வு- உரையாடல்

வகுப்பு 49 – பிரச்சனைக்கான தீர்வு- உரையாடல்

கதை
பாடும் பறவை

நமக்கு ஒருவரிடம் ஒரு கருத்தைப்பற்றிய உடன்பாடு இல்லாத போது அதைப்பற்றி ஒருவருக்கொருவர் கலந்து பேசி ஒரு தீர்வுக்கு வர (ஒரு விடை) உதவிக் கொள்வது பழக்கம்.

வெகு காலத்துக்கு முன் அனைத்து பறவைகளும் ரொம்ப சத்தமாக பாடிக்கொண்டிருந்தன ஏனெனில் அவை அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தன. ஒவ்வொரு பறவையும் தன் பாட்டு தான் மிகச்சிறந்த்தாக உள்ளது என்று நினைத்ததால் ஒவ்வொன்றும் மேலும் மேலும் சத்த மாக பாடின. பியூ,பியூ! கேளப்பா கேளப்பா கார்க், கார்க்!ட்விட்டர், ட்விட்டர் ட்வீட், ட்வீட்! வார்ப்ள், வார்ப்ள்! ஐயோ! ராத்திரியும் பகலும் ஒரே சத்தம். எந்த பறவையாலும் தூங்கவே முடியல. கடைசியில் சிட்டுக்குருவியும், குயிலும் இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என பேசிக்கொண்டன. ஆம், ஆம், என ஆமோதித்தன புறாவும் காக்காவும். நாம் சென்று ஆந்தையிடம் பேசுவோம். அது மிகவும் அறிவாளி. எல்லா பறவையும் ஆந்தை இருக்கும் மரத்திடம் சென்று, அது மரக்கிளையில் கண் மூடி அமர்ந்திருப்பதைக் கண்டன. சிட்டுக்குருவி, மரியாதையுடன், கூறியது, மன்னிக்கணும் திரு ஆந்தையாரே, தங்களிடம் பேசலாமா? திருவாளர் ஆந்தையார் ஒரு கண்ணைத்திறந்தார், ஆனால் எதுவம் பேசவில்லை. மன்னிக்கணும் திருவாளர் ஆந்தையாரே, குயில் கூறியது, பறவைகளாகிய எங்களுக்குஒரு பெரிய பிரச்சினை.

நீங்கள் மிகவும் அறிவாளி, அதனால் உங்களிடம் வந்துள்ளோம். என்ன பிரச்னை? ஆந்தை கேட்டது. இதுதான் பிரச்சனை, சிட்டுக்குருவி கூறியது” எல்லா பறவைகளும் மிகவும் சந்தோஷமாக இருந்ததால் அவை பெரும் சத்தத்துடன் பாட ஆரம்பித்தன., இப்போது எவ்வளவு சத்தமாக இரவும் பகலும் பாடுகிறோம் என்றால் நாங்கள் தூங்கவே முடிவதில்லை” ஆந்தை கூறியது” அவை ஏன் நான் சந்தோஷமாக இருக்கும்போது செய்வதுபோல் செய்யக்கூடாது? நான் ஹூ, ஹூ என்று மெதுவான குரலில் முணுமுணுப்பேன், நான் யாரையும் தொல்லைசெய்வது இல்லை. இதைக்கேட்டு பறவைகள் தங்கள் தங்கள் பாடலை மீண்டும் பாடின, எவ்வளவு சத்தம்! நிறுத்து, நிறுத்து! ஆந்தை கூறியது. இப்போது தெரிகிறது என்ன பிரச்சனை என்று

எல்லா பறவைகளும் சந்தோஷமாக இருப்பதால் அவை பாட விரும்புகின்றன. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் இடமும் இருக்கிறது பகல் பொழுதில் பாடுதல் நன்று, எனெனில் அப்போது அனைவரும் விழித்திருப்பர், ஆனால் இரவில் பாடுவதை நிறுத்திவிடவேண்டும், அப்போதுதான் தூங்க முடியும். இதில் எனக்கும், இராப்பறவைக்கும் மட்டும் விதிவிலக்கு. நாங்கள் இரவில் பாடுவோம் ஆனால் மெதுவாக பாடுவதால் எவருக்கும் தொல்லையில்லை, ஹூ, ஹூ!. ஆகவே, அன்னாள் தொடங்கி, இன்னாள் வரையில் பெரும்பாலான பறவைகள் பகல் பொழுதில் பாடுகின்றன, ஆந்தையும் இராப்பறவையும் மட்டும் இரவில் மெதுவாக பாடுகின்றன

பறவைகள் எவ்வாறு தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டனவோ, அது போல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் நம்மில் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டுமேயன்றி எவருடனும் சண்டையிடலாகாது என் இறைவன் விரும்புகிறார். கடவுள் எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். அவருக்கு நமது பிரச்சனை தெரியும், அதனை அவர் உணர்ந்து கொள்கிறார். நாம் சண்டையிடும்போது அவர் வருத்தப்படுகிறார். நாம் சந்தோஷமாக இணைந்து பணியாற்றும்போதும், விளையாடும்போதும் அவர் சந்தோஷமடைகிறார்.