வகுப்பு 48 – பேராசை

வகுப்பு 48 – பேராசை

கதை
பேராசை பிடித்த மேகம்

முன்னொரு காலத்தில் ஒரு மேகம் மிக அழகிய தேசத்தின் மேல் வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அம்மேகம் அதை விட மிகவும் பெரிய மற்றொரு மேகத்தைக் கண்டது. அதைக்கண்டவுடன், அம்மேகத்தின் மீது மிகவும் பொறாமை கொண்டது. பிறகு அம்மேகத்தினை விட தான் பெரியதாக வளர வேண்டும் என்று முடிவு செய்தது. எனவே தான் மழை பொழிவதில்லை என்று பொறுப்பற்று இருந்தது. உண்மையாகவே அம்மேகம் பெரியதாக வளர்ந்தது. அதே நேரத்தில் அந்நாடு முழுவதும் பாலைவனமாக மாறியது ஆனால் அம்மேகம் அதற்காக அக்கறை படவில்லை. பாலைவனத்தின் மேல் இருப்பதால். அதனால் புதியதாக நீரை எடுத்துக்கொண்டு பெரியதாக வளர்ச்சியை முடியாது என்பதனையும் அம்மேகம் உணரவில்லை எனவே மெதுவாக அம்மேகம் அதனது பெரிய தோற்றத்தினை இழந்தது, அதனால் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

மேகம் தனது தவறை உணர்ந்தது, அதனது பேராசையும் சுயநலமும், அதனது அழிவுக்கு காரணமானது ஆனால் அது மறைவதற்கு முன்னால் பெருமூச்சு விட்டது. அம்மேகம் மிகவும் சிறியதாகவும், லேசாகவும் இருந்ததால் அந்த காற்று அம்மேகத்தை நீண்ட தொலைவிற்கு ஒரு அழகிய தேசத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு சென்றதும் அம்மேகம் அதனது பழைய பெரிய உருவத்தை அடைந்தது.

இப்பாடத்தின் மூலம் கற்று கொள்வது, நமது மேகம் சிறிய உருவத்தில் இருந்தாலும் மழை பொழியும் போது அது பெருந்தன்மையுடன் இருந்தது அதன் புதிய நாடு பசுமையாக செழிப்புற்றிருந்தது அழகிய வானவில் இருக்கும் இடத்தில் அம்மேகம் இருந்தது.