வகுப்பு 44 – கீழ்ப்படிதல்

வகுப்பு 44 – கீழ்ப்படிதல்

கீழ்ப்படிதல் என்றால் என்ன? கீழ்ப்படிதல் என்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொல்படி நடத்தல் ஆகும். முதலில் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துவிட்டுப் பின்னர் அதற்கான காரணத்தைக் கேட்டு அறியலாமே? பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்களைவிட அதிகம் அறிந்தவர்கள் என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா!? யோசிங்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே அவர்களுக்கு நீங்கள் கட்டயமாகக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். உங்களை நல்ல மனிதர்களாக உருவாக்க விரும்புகிறர்கள்.

கதை
குறும்புக்கார ஆமை

ஒரு ஏரியில் ஒரு ஆமையும் இரண்டு அன்னப்பறவைகளும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தன. தினமும் அம்மூன்றும் ஏரிக்கரையில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தன. அப்படி அவை சந்திக்கும் பொழுது தங்களின் கதைகளை சந்தோஷமாகப் பரிமாறிக் கொள்ளும்.

ஒரு வருடமாக மழை இல்லாததால் ஏரி வறண்டு போக ஆரம்பித்தது. ஏரியில் தண்ணீரின் அளவு குறைவதைக் கண்ட அன்னப்பறவைகள் கவலைப்படத் தொடங்கின. அவை ஆமையிடம் “இனி நீ இந்த ஏரியில் வாழ முடியாது, ஏரி சீக்கிரமே வறண்டு விடும்”, என்று கவலையாகக் கூறின.

ஆமைக்கு பிரச்சனை நன்றாகப் புரிந்தது. இனி இங்கு வாழ முடியாது என்பதை நன்றாக உணர்ந்தது. தன்னுடைய நண்பர்களிடம் “நண்பர்களே வேறு ஒரு ஏரியைத் தேடுங்கள், அதில் நிறைய தண்ணீர் இருக்க வேண்டும். நீங்கள் கண்டுபிடித்துவிட்டு வரும்பொழுது ஒரு வலிமையான குச்சியைக் கொண்டு வாருங்கள். நீங்கள் நீர் நிறைந்த ஏரியைக் கண்டவுடன் என்னை அங்கு கொண்டு செல்லுங்கள். அதற்கு நான் அந்த குச்சியைப் பயன்படுத்தி கொள்கிறேன்.

நான் குச்சியை என் வாயால் கவ்விக் கொள்வேன், நீங்கள் குச்சியின் இரு முனையையும் பிடித்துக் கொண்டு பறக்கலாம் என்று கூறியது.

மறுநாள் அவர்களின் திட்டப்படி அன்னப்பறவைகள் நீர்நிறைந்த ஏரியைத் தேடிப் பறந்து சென்றன. சில நாட்களில் நீர்நிறைந்த ஏரியையும் அவை கண்டுப்பிடித்துவிட்டன. ஆமையை சுமந்து செல்ல ஏரிக்குத் திரும்பி வந்தன. அவைகள் புறப்படும் நாள் வந்தது. அன்னப்பறவைகள் ஆமையிடம், “நண்பரே நாம் இன்று இந்த ஏரியை விட்டுப் புது ஏரிக்குச் செல்ல உள்ளோம், நீ குச்சியை நன்றாகப் பிடித்துக் கொள், எக்காரணம் கொண்டும் நீ வாயைத் திறக்கக் கூடாது, அப்படி நீ வாயைத் திறந்தால் கீழே விழுந்து விடுவாய்,” என்று அறிவுரைக் கூறின. இறுதியாக அவைப் பறக்க ஆரம்பித்தன. வெகுதூரம் பறந்து வந்து கொண்டு இருந்தன. அப்போது ஆமை வழியல் ஒரு கிராமத்தைக் கண்டது. அதே நேரத்தில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அன்னபறவைகள் ஆமையுடன் பறந்து செல்லும் அரிய காட்சியை கண்டு வியந்தார்கள்.

“அங்கே பாருங்கள் இரண்டு அன்னப்றவைகள் ஒரு ஆமையை சுமந்து செல்லும் அரிய காட்சியைப் பாருங்கள்” என்று பேசிக் கொண்டு இருந்தார்கள். இந்த காட்சியை கண்ட ஆமை “அங்கு என்ன பதட்டம்.” என்று வாயைத் திறந்து கேட்ட மாத்திரத்திலே கீழே விழ அரம்பித்தது. இதைக் கண்ட அன்னபறவைகளால் ஆமையை காப்பற்ற ஒன்றும் செய்ய முடியவில்லை.