வகுப்பு 43 – ஏமாற்றாதே

வகுப்பு 43 – ஏமாற்றாதே

கதை : இரவல் இறகுகள்

ஒரு முறை கடவுள் அனைத்து பறவைகளையும் அழைத்து உங்களில் பார்ப்பதற்கு அழகாக இருப்பவர், பறவைகளின் அரசனாகலாம் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் பறவைகள் தங்கள் இறகுகளை அழகுபடுத்தவும், தோகையை விரித்து அழகாக நடனமாடவும் ஆரம்பித்தன. இதை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு சிட்டுக்குருவி, தன்னுடைய இறகுகளை பார்த்து கவலைப்பட்டது, பின்னர் அது ஒரு திட்டம் போட்டது. மற்ற பறவைகள் கூடியிருந்த இடத்திற்கு அமைதியாக தத்தி தத்திச் சென்றது. மற்ற பறவைகளின் அழகான இறகுகளை சேகரித்தது. பின்னர் அது சேகரித்த இறகுகளைத் தன்னுடைய இறகுகளுக்கு இடையிடையே, வானவில் போன்று வரும் வரை சொருகிக் கொண்டே இருந்தது. கடவுள் சொன்ன நேரத்திற்கு அனைத்து பறவைகளும் கூடின.

அப்பொழுது அங்கு வந்த கடவுள் அனைத்துப் பறவைகளையும் பார்வையிட்டுக் கொண்டே நடந்து வந்தார். அப்பொழுது சிட்டுக்குருவியின் அழகைக் கண்டு பறவைகளின் அரசன் நீ தான் என்று சொல்ல நினைத்த பொழுது சிறிய காற்று வீசிக் குருவியின் இறகுகளை உதிர்த்துவிட்டது. அப்பொழுது அங்கு சிறு பதற்றம் ஏற்பட்டது. மற்ற பறவைகள் அதனிடமிருந்து தங்களின் இறகுகளை சேகரிக்க ஆரம்பித்தன. குருவி திருடிய இறகுகள் அனைத்தும் உரிய பறவைகளிடம் சென்றன. ஏமாற்றி வெற்றி பெற நினைத்த சிட்டுக்குருவி ஏமார்ந்து போனது.

நீதி
  • மற்றவர்களை விட சிறந்தவர் போல காட்டிக் கொள்ளாதே.
செயற்பாடு

இரவல் இறகுகள்: மரக்கிளையில் பறவைகள் இருப்பது போல படம் வரையவும். வண்ணத்துப் பூச்சியின் படம் வரையவும். இவற்றில் எதற்கு அழகான இறகுகள் உள்ளன என்று கூறவும்.