வகுப்பு 42 – திருப்தி

வகுப்பு 42 – திருப்தி
கதை
காகமும் மயிலும்

ஒரு காட்டில் ஒரு காகம் வசித்து வந்தது. அது தன் வாழ்க்கையில் முழு திருப்தியுடன் இருந்தது. ஆனால் ஒரு நாள் அது ஒரு அன்னத்தைப் பார்க்கும் போது. ”இந்த அன்னம் தான் எவ்வளவு வெண்மையாக இருக்கிறது?” என்று நினைத்தது. “நான் எவ்வளவு கருப்பாக இருக்கிறேன். இந்த அன்னம் தான் உலகிலேயே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் பறவையாக இருக்கும்” என்று எண்ணியது. தன் எண்ணத்தை அது அன்னத்திடம் வெளிப்படுத்தியது.

அன்னம் பதிலளித்தது, ”உண்மை தான். இரண்டு வண்ணங்கள் கொண்ட ஒரு கிளியை பார்க்கும்வரை நான் தான் மிகுந்த சந்தோஷம் கொண்ட பறவை என்று எண்ணியிருந்தேன். படைப்பிலேயே கிளிதான் மிகுந்த சந்தோஷமான பறவை என்று இப்போது நான் கருதுகிறேன்.” இதைக் கேட்ட காகம் உடனே கிளியிடம் சென்றது. கிளி விவரித்தது. “ஒரு மயிலை பார்க்கும் வரை நான் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அதாவது, எனக்கு இரண்டு வண்ணங்கள் தான் உள்ளன. ஆனால் மயிலோ பலவித வண்ணங்களைக் கொண்டுள்ளது.

பிறகு காகம், மிருகக்காட்சி சாலையில் உள்ள மயிலைக் காணச் சென்றது. அங்கு நூற்றுக் கணக்கான பேர் அதனைக்காண குழுமியிருப்பதை கண்ணுற்றது. அனைவரும் சென்ற பிறகு காகம் மயிலிடம் சென்று பேசியது “அன்பான மயிலே, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். தினமும் ஆயிரக்கணக்காண பேர் உன்னை காண வருகிறார்கள். மக்கள் என்னை பார்க்கும் போது உடனே விரட்டி விடுகிறார்கள். இந்த கிரகத்திலேயே, நீதான் உண்மையிலேயே மகிழ்ச்சியான பறவை என்று நான் எண்ணுகிறேன்”

மயில் பதில் கூறியது, “இந்த பூகோளத்திலேயே நான் தான் அழகான மற்றும் மகிழ்ச்சியான பறவை என்று நான் எப்போதும் நினைத்ததுண்டு. ஆனால் என் அழகின் காரணமாக நான் இந்த மிருகக்காட்சி சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். இந்த மிருகக்காட்சி சாலையை, கூர்ந்து ஆராய்ந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், காகம் மட்டுமே இங்கு கூண்டில் அடைக்கப்படவில்லை. சில நாட்களாக நான் என்ன நினைக்கிறேன் என்றால், நான் ஒரு காகமாக இருந்திருந்தால், நான் சந்தோஷமாக எங்கும் சுற்றித் திரிய முடியும்.”

இது நம்முடைய பிரச்சனையும் கூட. நாம் பிறருடன் நம்மை அனாவசியமாக ஒப்பிட்டு, வருத்தமடைகிறோம். இறைவன் நமக்கு அளித்துள்ளவைகளை நாம் மதிப்பீடு செய்வதில்லை. இவை நம்மை சந்தோஷமற்ற ஒரு நிலைக்கு இட்டுச் செல்கிறது. நம்மிடம் இல்லாதவை என்ன என்று பார்ப்பதை விட்டு, இருப்பதை கொண்டு சந்தோஷமடைய வேண்டும். எப்பொழுதும் நம்மைவிட கூட அல்லது குறைய உள்ளவர்கள் யாரேனும் இருந்துக் கொண்டேதான் இருப்பர். http://demo3.esales.in:8081/ தம்மிடம் உள்ளதை கொண்டு திருப்தி அடைபவரே உண்மையில் உலகத்தில் சந்தோஷமாக இருப்பவர் ஆவார்.