வகுப்பு 41 – மன நிறைவு

வகுப்பு 41 – மன நிறைவு

  மன நிறைவு என்றால் என்ன? நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்பது ஆகும். நாம் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு மறைந்துள்ளது. சிலர் சிறப்பாக நடனமாடுபவராகவும், சிலர் சிறந்த பாடகராகவும், சிலர் சிறந்த ஓவியராகவும் இருக்கின்றார்கள். பல குழந்தைகள் உண்ண உணவின்றியும், உடுத்த உடையின்றியும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.

  நாம் நமக்கு கிடைத்துள்ளவைகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நம்மைப் போல அனைத்தும் கிடைக்கப் பிரார்த்தனைச் செய்வோம்.

  நிமிர்ந்து அமர்ந்து, கண்களை மூடி கைகளை கூப்பி கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம். அன்பான கடவுளே எங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்தமைக்கு நன்றி. எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமைந்தது போல மற்ற ஏழை குழந்தைகளுக்கு அனைத்தும் கிடைக்க கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம். எங்களுக்கு கிடைத்த அனைத்து நன்மைகளுக்கும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.உங்களுடைய அன்பிற்கும் நன்றி.

  கதை : ஒட்டகமும், ஆடும்

  ஒரு நாள் ஒட்டகமும் ஆடும் நெடுதூரம் நடந்து சென்றன. ஒரு இடத்தில் மரங்கள் அடர்ந்து இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தன. ஆனால் அந்த இடம் முழுவதும் வேலி போடப்பட்டு இருந்ததால் ஆட்டினால் உள்ளே சென்று இலைகளை உண்ண முடியவில்லை. இதை கண்டுக் கொள்ளாமல் ஒட்டகம் மரக்கிளையில் உள்ள துளிர் இலைகளை மகிழ்ச்சியாக உண்டது. ஆடு வருத்ததுடன் இருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டு, ‘நீ உயரமாக இருந்திருக்கலாம்’ என்று கேலிச் செய்தது.

  அவை மேலும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு காய்கறி தோட்டத்தை அடைந்தன. தோட்டத்திற்குள் செல்ல ஒரு சிறிய கதவு இருந்தது. அதுவும் திறந்து இருந்தது. ஆடு அந்த வழியாக தோட்டத்திற்குள் சென்று காய்கறிகளை சந்தோஷமாக உண்டு மகிழ்ந்தது. ஒட்டகத்தால் அந்த சிறிய பாதை வழியாக உள்ளே நுழைய முடியவில்லை. இதை கண்ட ஆடு சில சமயம் நாம் சின்னதாக இருப்பது நன்மையே என்று கூறியது.

  இதில் அவை தங்கள் படைப்பின் அவசியத்தை உணர்ந்துக் கொண்டன.

  செயற்பாடு
  • உனது நண்பனுக்கும் உனக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை எழுதுக. அவனிடம. கண்டுபிடிக்க முடியாத விசயத்தையும் எழுதுக.