வகுப்பு 40 – திருப்தி

வகுப்பு 40 – திருப்தி

மூக்கின் கதை

ஒரு சிறுவன் தனக்கு தன் நண்பனைப் போன்று கூர்மையான மூக்கு வேண்டும் என்று ஆர்வமுடன் கடவுளை வேண்டினான். அவனது வேண்டுதலை நிறைவேற்ற ’கேப்ரியல்’ என்ற தேவதையை இறைவன் அனுப்பினார். அந்த சிறுவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் கண்ணாடியில் அவனது நீளமான முக்கினை கண்டவுடன் திடுக்கிட்டான். அப்பொழுதுதான் உணர்ந்தான், தனக்கு எது சிறந்தது என்று கடவுளுக்குத் தெரியும். அவர் தனக்கு சிறப்பானவற்றையேக் கொடுத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டான். உடன் அவன் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் தன்னுடைய பழைய மூக்கினையே தருமாறு வேண்டிப் பெற்றான்.

நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே தோற்றத்தில் உள்ளீர்களா? இல்லை. சிலர் குண்டாகவும், சிலர் ஒல்லியாகவும், கருப்புவாகவும், சிவப்பாகவும், உயரமாகவும், உயரம் குறைவாகவும் உள்ளனர். உங்களில் சிலர் சிறந்த பாடகர்கள், சிறந்த நாட்டியக்காரர்கள், சிறந்த கையெழுத்தை உடையவர்கள், சிறந்த ஓவியர்கள், மற்றும் பல திறமைகளை உடையவர்கள். எனவே உங்களது தோற்றம் மற்றும் உங்களிடம் இருப்பதைக் கொண்டு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

பாடல்

“I am the way I am”

“I am the way I am And I am very happy with that I may be short or I may be tall My body may be thin or fat But it really doesn’t matter at all I am the way I am”

செயற்பாடு
  • உங்களிடம் உள்ள அனைத்தையும் பெயரிடுக. ஒவ்வொருவரும் விதவிதமானப் பரிசுகளைப் பெற்றுள்ளீர்கள். உங்களிடம் உள்ள அனைத்து நன்மைகளையும் நினைத்தீர்கள் என்றால், நீங்கள் சுலபமாக மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் பெற்ற ஆசிர்வாதங்களைக் கணக்கிடுங்கள்.
அமைதியாக அமர்தல்
  • இறைவன் எனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.