வகுப்பு 38 – மகிழ்ச்சியாயிருத்தல்

வகுப்பு 38 – மகிழ்ச்சியாயிருத்தல்

உற்சாகமாயிரு, புன்னகையோடு இரு. புன்னகை உன்னையே மகிழ்ச்சியூட்டும். உன் ஆசிரியரைப் பார்த்துப் புன்னகை செய். உன் இருபுறமும் இருக்கும் நண்பர்களைப் பார்த்துப் புன்னகை செய். இப்பொழுது நீ எவ்வாறு உணர்கிறாய்? ஒருவரோடு ஒருவர்ப் பகிர்ந்து கொண்டப் புன்னகையினால் உன் மனம் மகிழ்ச்சியடைந்தது பார்த்தாயா? உன் புன்னகையால் பிறர் உன்னை நேசிப்பர். உன் புன்னகை பிறருக்கு மகிழ்ச்சி அளிக்கும். பிறர் மகிழ்ச்சி உனக்கும் மகிழ்ச்சி கொடுக்கும்.

பாடல்

The time to be happy is now and the place to be happy is here..
And the way to be happy is to make someone happy
And to have a little heaven right here..
And to have a little heaven right here..

மகிழ்ச்சி என்பது இப்போதே, மகிழ்ச்சி என்பது இங்கேயே மகிழ்ச்சியாய் இருக்க வழியென்னப் பிறரை மகிழ்விக்க வைப்பதுவே கிட்டும் சுவர்க்கம் இப்போதே குட்டி சுவர்க்கம் இப்போதே

அல்லது

“When you are happy”

  • யாருக்கு ‘ஸ்மைலி’ என்று பெயர் தெரியுமா? எவன் ஒருவன் எப்பொழுதும் புன்னகைப் பூத்த முகமாக இருக்கிறானோ அவனுக்குத்தான்.
செயற்பாடு
  • உன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் ஒரு ‘ஸ்மைலி’ வரையவும். ஆசிரியர் போர்டில் என்ன வரைகிறாரோ அதை வரைந்து பளிச்சென்று மஞ்சள் நிறம் தீட்டு. ஸ்மைலியைப் பார்த்து புன்னகைக்க மறந்துவிடாதே. புன்னகைக்கும் உதடுகளுக்குப் பளிச்சென்று சிவப்பு நிறம் தீட்டு. ஒவ்வொரு பக்கத்தின் மேலும் “ஸ்மைலி” என்று எழுது. அந்த ஸ்மைலியைப் பார்க்கும் பொழுதெல்லாம் உனக்கும் புன்னகை வருகிறதல்லவா? நீயே ஒரு ‘ஸ்மைலி’ ஆகலாம்!
அமைதியாக அமர்தல்
  • பகவான், நீ எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருக்குப் புன்னகை முகம்தான் மிகவும் பிடிக்கும். பிறரைக் கண்டால் புன்முறுவல் செய்து வாழ்த்து கூறு. அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.