வகுப்பு 36 – நேரம் தவறாமை

வகுப்பு 36 – நேரம் தவறாமை

நாம் இப்பொழுது, இயற்கை விஷயங்கள் எப்படி எப்பொழுதும் நேரம் தவறாமல் நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம். சூரியன் உரித்த நேரத்தில் உதிக்காவிட்டால் என்ன ஆகும்? நீ இருட்டில் தான் பள்ளிக்குச் செல்லவேண்டும் அல்லவா? வேறு என்ன இருக்கிறது? யோசித்துப்பாருங்கள்! சூரியன் ஒரு நாளும் நேரம் தவறி உதித்ததில்லை. கவனித்திருக்கிறீர்களா? இயற்கை விஷயங்கள் அனைத்தும் உரித்த நேரத்தில் நடக்கின்றன, மனிதனைத் தவிர.

ஒரு வேலையை உரிய நேரத்தில் செய்வது மட்டும் முக்கியமல்ல. அதை நன்றாகவும் செய்யவேண்டும். நீ நேரத்தில் செய்யவேண்டும் என்பதற்காகக் கவனமின்றி செய்து முடிக்கக் கூடாது. http://demo3.esales.in:8081/ நன்றாகச் செய்யவேண்டும். நேரத்திலும் செய்யவேண்டும். ஒரு வேலையை முதல் முறை ஒழுங்காக செய்ய முடியவில்லை என்றால், மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். விரைவில் நீ அதை செய்து முடிப்பாய்.

கதை : குரங்கும் நரியும்

ஒரு முறை, ஒரு குரங்கிற்கும் ஒரு நரிக்கும் ஒரு விருந்திற்கான அழைப்பு கிடைத்தது. அவையிரண்டும் சென்று கொண்டிருந்தபோது, வழியில் தாழ்ந்த கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரத்தைக் கண்டன. குரங்கு நரியிடம், “அந்த மரத்தைப் பார். விளையாடுவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளதல்லவா? நான் சிறிது நேரம் அந்த மரக்கிளையில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடிவிட்டு வருகிறேன். பிறகு செல்லலாம்” என்று கூறியது. அதற்கு நரி, “நான் எங்கு சென்றாலும் உரிய நேரத்தில் செல்லவேண்டும் என்று விரும்புவேன். நீ வேறொரு நாள் ஊஞ்சலாடலாம் அல்லது நாம் சென்று திரும்பும் போது ஆடலாம்” என்று கூறியது. ஆனால், குரங்கோ ஏற்கனவே மரத்தின் மேல் உல்லாசமாக விளையாடிக் கொண்டிருந்தது. நரி நடையைக் கட்டியது. விரைவாக அவ்விடத்தைச் சென்றடைந்தது.

சிறிது நேரம் கழித்து குரங்கிற்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு சிறப்பு விருந்து ஞாபகத்திற்கு வந்தது. முடிந்தவரை வேகமாக ஓடியது. அதற்குள் விருந்து முடிந்தேவிட்டது. நரியார் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு, உதடுகளை நக்கிக்கொண்டு, நடக்க முடியாமல் நடந்து வருவதைத்தான் குரங்கிற்குக் காண முடிந்தது. தாமதமாக செல்பவர்கள் எங்கு சென்றாலும் நல்ல சந்தர்ப்பங்களைத் தவறவிடுவார்கள். அவர்களுக்கு அழைப்பு விடுக்க எவரும் விரும்புவதில்லை.