வகுப்பு 3 – கடவுள் எங்கு இருக்கிறார்?

வகுப்பு 3 – கடவுள் எங்கு இருக்கிறார்?

கதை

ஒரு அழகான வீடு மற்றும் அருமையான குடும்பத்தில் வாழ்கிறான் தர்ஷன். அன்பான பெற்றோர் அவனுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகின்றனர். அவனுடைய தாய் எப்பொழுதும் கடவுளை வழிபட்டு நல்ல பிள்ளையாய் இரு என்று அவனிடம் கூறிக்கொண்டே இருப்பார். தர்ஷன் நல்ல பிள்ளைதான், ஆனால் தினசரி பிரார்த்தனையை மறந்துவிடுவான். அது காலை நேரம் மேலும் அவன் பள்ளிக்குச் செல்லவேண்டும். தர்ஷன் எழுந்திருந்துப் படுக்கையில் அமர்ந்திருக்கிறான். அதே சமயம், யாரோ ஒருவர் அவன் படுக்கையருகில் நின்றுகொண்டு அழகான புன்னகையுடன், “காலை வணக்கம் என் அன்புத் தோழரே” என்று கூறுகிறார். ஆனால் தர்ஷனுக்கு அதைக் கேட்கவோ அல்லது அவரைப் பார்க்கக்கூட நேரமில்லை. ஏனெனில் அவனுக்கு நேரமாகிவிட்டது மேலும் அவன் வீட்டுப் பாடம் வேறு எழுதி முடிக்கவேண்டும். அவன் சென்று பல் துலக்கி, குளித்துவிட்டு வந்தான். ஒரு பெரிய புன்னகையுடன் யாரோ ஒருவர் வெளியில் காத்துக்கொண்டு, மீண்டும், “காலை வணக்கம்“ என்று கூறுகிறார். ஆனால் தர்ஷனுக்குப் பார்க்கக்கூட நேரமில்லை.

அவன் காலை உணவு உட்கொள்ள வந்தமர்ந்தான். தர்ஷன் தமக்கும் உணவு அளிப்பான் என்று யாரோ ஒருவர் அவனருகில் காத்திருந்தார். மீண்டும் ஒரு பெரிய ‘இல்லை’ தான். தர்ஷன் தன் வீட்டுப் பாடத்தில் மூழ்கினான். அதை முடித்ததும் அவன் பள்ளிக்குக் கிளம்பி ஓடினான். அவன் அம்மா, “தர்ஷன், நீ உன் பிரார்த்தனையை முடித்தாயா?” என்று கேட்டார். “இல்லை அம்மா. எனக்குப் பள்ளிக்கு நேரமாகிவிட்டது” என்று கூறினான் தர்ஷன். அவன் ஷூ போடும்போதும் அவனருகில் ஒருவர் காத்திருந்தார். அப்பொழுதும் அவன் கவனிக்கவில்லை, ஏனெனில் அவனுடைய பேருந்து ஏற்கனவே வந்திருந்தது.

ஆனால் அவனுடைய நண்பர் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். மாலை தர்ஷன் பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அவனுடைய அந்த நண்பர் அவனுக்கு மாலை வணக்கம் கூறினார். தர்ஷனோ வெளியில் சென்று விளையாடும் அவசரத்தில் இருந்தான். அதனால் அவனுக்கு அந்த நண்பரின் குரல் காதில் விழவேயில்லை. அவன் பாலருந்திவிட்டு, தின்பண்டங்கள் சாப்பிட்டுவிட்டு அவசரமாக விளையாட ஓடினான். விளையாடி முடித்துவிட்டு தர்ஷன் வீடு திரும்பினான். அவன் வேகமாக ஒடி வரும்பொழுது தரையிலிருந்த தண்ணீரைப் பார்க்காமல் வழுக்கி விழுந்தான். “கடவுளே! அம்மா!” என்று கத்தினான்.

அம்மா வருவதற்கு முன்னர், நாள் முழுவதும் அவனுடனேயே இருந்த அந்த நண்பர் அங்கு நின்று அவனைத் தேற்றினார். “நீ யார்?” என்று கேட்டான் தர்ஷன். “நான் உனது நண்பன்” “என்ன என் நண்பனா? நான் உன்னை இதற்கு முன்னர் பார்த்ததேயில்லையே” என்றான் தர்ஷன். “ஆம் நான் உன் நண்பன்தான். கீழே விழும்பொழுது நீ என்ன கூறினாய்? அந்தக் கடவுள்தான் நான், உன் நண்பன்”. “நீங்கள் எப்படி இவ்வளவு வேகமாக வந்தீர்கள்? அதுவும் என் அம்மா வருவதற்கு முன்னால்?” என்று வினவினான் தர்ஷன். கடவுள் புன்னகையுடன் கூறலானார், “நண்பா தர்ஷன், நான் எப்பொழுதும் உன்னுடனேதான் இருக்கிறேன். நீ என்னுடன் பேசுவாய் என்று காத்துக்கொண்டேயிருக்கிறேன். காலையில் நான் உனக்கு வணக்கம் கூறினேன். நீ உணவு உண்ணும் முன் எனக்கு அளிப்பாய், அதை பிரசாதமாக்கி உனக்களிக்கலாம் என்று நான் காத்திருந்தேன். அனால், இது வரை நீ என்னை நினைக்கவே இல்லை. நீ என்னை நினைத்த அதே நிமிடத்தில் நான் ஓடோடி வந்துவிட்டேன். உனக்கு மட்டுமில்லை என் அன்பு நண்பனே. நான் அனைவருடனும் இருக்கிறேன். அனைவரையும் நேசிக்கிறேன். பதிலுக்கு, நீங்கள் இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரிடமும் அன்பு காட்டு மேலும் அனைவருக்கும் சேவை செய். அதுதான் என்னை சந்தோஷப்படுத்தும்”. நான் இனி எப்பொழுதும் கடவுளை நினைப்பேன், மேலும் அனைவரையும் நேசிப்பேன், அனைவருக்கும் சேவை செய்வேன் என்று தர்ஷன் கடவுளிடம் வாக்குறுதி அளித்தான்.

நீதி
  • கதை முடிந்தவுடன் குழந்தைகளிடம் கேளுங்கள் – எதற்காகவாவது பயப்படவேண்டிய அவசியம் உள்ளதா? நீங்கள் எப்பொழுதாவது எதற்காகவாவது பயந்தாலோ அல்லது தனிமையை உணர்ந்தாலோ, உடனே கடவுளை நினையுங்கள். கடவுள் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கிறார் மேலும் அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்பதை நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
பாடல் – Day With Sai

“When I go to bed every night”

When I go to bed every night I wish to sleep sound and tight So with me my Sai I take Who is with me when I sleep and wake So in the morning when I rise I call out Sai Sai Sai I then brush my teeth and call out Sai Sai Sai I take a bath and call out Sai Sai Sai Before I eat my food I call out Sai Sai Sai I go to School saying Sai Sai Sai I play with friends and say Sai Sai Sai Again at night before sleeping I call out Sai Sai Sai

பாடல் : சாய் சாய் சாய் என்பேன்

உறங்கும் முன்னர் சாய் என்பேன்! நன்றாய் உறங்க சாய் என்பேன்! உறங்கும்போதும், விழிக்கும் போதும் எவர்தான் வருவர் நம்முடனே? அதனால் நானும் சாய் என்பேன்! அதிகாலையில் சாய் என்பேன்! பல் துலக்கும் போதும் சாய் என்பேன்! குளிக்கும் போதும் சாய் என்பேன்! உண்ணும் போதும் சாய் என்பேன்! பள்ளி செல்லும் போதும் சாய் என்பேன்! விளையாடும் போதும் சாய் என்பேன்! மீண்டும், உறங்கச் செல்ல சாய் என்பேன்! சாய் சாய் சாய் என்பேன்! சாய் சாய் சாய் என்பேன்!

அமைதியாக அமர்தல்
  • கடவுளே! தயவு செய்து எப்பொழுதும் என்னுடனே இருங்கள், என்னை வழி நடத்துங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.