வகுப்பு 29 – ஆரோக்கிய உணவு & ஆரோக்கியமற்ற உணவு

வகுப்பு 29 – ஆரோக்கிய உணவு & ஆரோக்கியமற்ற உணவு

ஆரோக்கிய உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பற்றய கதை: ரெஜி எலியின் சுருங்கும் உடைகள்
  • ரெஜி எலிக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்குக் காலை உணவு, மதியம் மற்றும் இரவு உணவு அனைத்தும் சீஸ் தான். ரெஜியின் தாய் எலி ரீடா, “ரெஜி! சீஸ் சாப்பிடு. ஆனால், பழம், காய்கறிகள், பருப்பு வகைகள், ரொட்டி, மற்றும் கீரை போன்ற ஆரோக்கியமான உணவுகளையும் உண்ணவேண்டும்” என்று கூறியது. அதற்கு ரெஜி, “முடியவே, முடியாது! அம்மா, நான் சீஸ் மட்டும் தான் சாப்பிடுவேன், வேறெதுவும் உண்ணமாட்டேன்.” என்றது.
  • ஒரு நாள், ரெஜி சட்டை போடும் போது, சட்டை பட்டன் எல்லாம் ‘பட் பட்’ என்று விரிந்தது. “அய்யோ! என் சட்டை சுருங்கிவிட்டதே!“ என்றலறியது ரெஜி. பான்ட் போட்டுப் பார்த்தது. ‘ரிப் ரிப்’ என்று கிழிந்தது பான்ட். “அய்யோ! பான்டும் சுருங்கிவிட்டதே.” என்றழுதது ரெஜி. உடனே ஓடிச் சென்றுத் தன் அலமாரியில் உள்ள அனைத்து உடைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக உடுத்திப் பார்த்தது. ‘பட் பட்’, ‘ரிப் ரிப்’ தான். எதுவும் கொள்ளவில்லை. “அய்யோ! என்னுடைய எல்லா உடைகளும் சுருங்கிவிட்டனவே. என்ன செய்வது“ என்று அழுதது.
  • இதன் அழுகை, தாய் ரீட்டாவிற்குக் கேட்டது. ரீட்டா வேகமாக ரெஜியின் படுக்கையறைக்கு வந்து, மிகவும் மென்மையான குரலில், “ரெஜி, ஏன் அழுகிறாய்? உன் உடைகள் எல்லாம் ஏன் தரையில் கிடக்கின்றன?” என்று கேட்டது. “அம்மா! இது ரொம்ப கொடுமை. என்னுடைய எல்லா ஆடைகளும் சுருங்கிவிட்டன” என்று வருத்தமாகக் கூறியது ரெஜி. “ம்ம்ம். உன்னுடைய எல்லா உடைகளும் சுருங்கிவிட்டனவா? அவற்றை விரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். ரெஜி! அதற்கு நீ சீஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, காய், கனி, பருப்பு மற்றும் ரொட்டி போன்ற ஆரோக்கியமான உணவுகளையே உண்ணவேண்டும்” என்று கூறியது ரீட்டா.
  • அன்றிரவு, ரெஜி கேரட், கீரை மற்றும் திராட்சை உண்டது.