வகுப்பு 28 – உணவு உண்ணும் பழக்க வழக்கங்கள்

வகுப்பு 28 – உணவு உண்ணும் பழக்க வழக்கங்கள்

நீ சாப்பிடும் முன் கை கழுவா விடில் உன் கையிலுள்ள அழுக்கு வயிற்றுக்குள் சென்று விடும். அது உன்னை நோயாளியாக்கி விடும். நீ பலசாலியாகவும், ஆரோக்யமாகவும் இருக்கிறாய், ஏனென்றால் உன் அம்மா நல்ல சுத்தமான உணவைச் சமைக்கிறாள். அவள் உனக்கு சுத்தமான கொதிக்க வைத்த நீரைப் பருகத் தருகிறாள். சுத்தமும் நேர்த்தியும் உன்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நாம் அனைத்து காய்கறிகளையும், பழங்களையும் உண்ண வேண்டும். நாம் சாப்பிடும் உணவை இறைவனுக்கு படைக்கும் போது அது பிரசாதமாகிறது

ஸ்லோகம்

ஹரிர்தாதா, ஹரிர்போக்தா, ஹரீரன்னம் ப்ரஜாபதி:
ஹரிர்விப்ர, சரீரஸ்து, புங்தே போஜயதே ஹரி:

நல்ல, ஆரோக்கியமான உணவு பற்றி விவரிக்க, காய்கறி, பழங்களின் படங்களைக் காட்டவும்.

பாட்டு

என்னை உண்டால், உன்னை குண்டாக்குவேன் சொன்னது உருளை சக்தி கொடுப்பேன் நான், சொன்னது கீரை முட்டைகோஸ், தக்காளி, கேரட்டு பட்டாணி, வெண்டை, கத்தரி இன்னபிற உண்டிடுவாய் எங்களை, உயரமாக வளர்வாய் – என்றனவே!

அமைதியாக அமர்தல்
  • அனைத்து காய்கறிகளும் பழங்களும் எனக்கு நல்லதே தரும். நான் ஆரோக்கியமான உணவையே உண்பேன்.