வகுப்பு 26 – சத்யம்

வகுப்பு 26 – சத்யம்
கதை : மூன்று கோடரிகள்

ஒரு காட்டிற்குப் பக்கத்தில் இரண்டு மர வெட்டிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். முதல் வீட்டில் வசித்து வந்த தீனா மரவெட்டி மிகவும் சுறுசுறுப்பான நல்ல மனிதன். இரண்டாவது வீட்டில் வசித்து வந்த சேனா மரவெட்டி மிகவும் சோம்பேறியான கெட்ட மனிதன். இருவரும் பக்கத்தில் இருந்த காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டி தங்களது வாழ்க்கையை ஓட்டி வந்தனர். ஒரு நாள் எப்போழுதும் போல தீனா வேலைக்குப் புறப்பட்டார். காட்டிற்குச் சென்று மரத்தைத் தேட ஆரம்பித்தான். அங்கு நல்ல மரங்கள் இல்லாததால் ஆற்றங்கறைக்கு சென்று தேடலாம் என எண்ணினான் ஆதனால் தீனா ஆற்றங்கறைக்குச் சென்றான். அங்கு ஒரு பெரிய மரத்தைக் கண்டான். தீனா அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு அதை வெட்ட ஆரம்பித்தான். அவன் மரத்தை வெட்டிக் கொண்டிருந்த பொழுது அவனது கோடரி கை தவறி ஆற்றில் விழுந்தது. அவன் கதறி அழுது கடவுளிடம் வேண்டினான்.

உடனே ஒரு தேவதை அவன் முன் தோன்றி அவனிடம் “என்ன ஆயிற்று?” என்று கேட்டது. தனது மரவெட்டி ஆற்றில் விழுந்ததைச் சொன்னான். தேவதை அதனை எடுத்துத் தருவதாகக் கூறியது. அந்த தேவதை ஆற்றில் இருந்து ஒரு கோடரியை எடுத்தது. அது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. தீனாவிற்கு மினுமினுப்பாக இருந்த கோடரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தீனா கொஞ்சம் கூடத் தயங்காமல், அது தன்னுடையது அல்ல என்று கூறினான். தேவதை ஆற்றில் இருந்து மற்றொரு கோடரியை எடுத்தது. அது வெள்ளியால் செய்யப் பட்டிருந்தது. இதுவும் தன்னுடையதல்ல என்று மறுத்து விட்டான். தேவதை இப்பொழுது இரும்புக் கோடரியை எடுத்தது. தீனாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. இது தன்னுடையது தான் என்று கூறினான். தேவதை அவனுடைய நேர்மையைப் பாராட்டி அந்த முன்று கோடரியையும் அவனுக்குப் பரிசாகத் தந்தது. தீனா மூன்று கோடரியையும் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.

அவன் சேனாவின் வீட்டைத் தாண்டி சென்ற பொழுது கோடரிகளைக் கண்ட சேனா அதிர்ச்சி அடைந்தான். சேனா விசயத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு தீனாவைப் பின் தொடர்ந்தான். தீனா தன் வீட்டை அடைந்து தன் மனைவியை அழைத்தான். அவள் அங்கு வந்து மரவெட்டிகளை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள் தேவதை தோன்றியதையும், அந்த மூன்று மரவெட்டியைக் கொடுத்ததையும் பற்றியும் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் வெளியே ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தான் சேனா.

மறுநாள் தீனாவை பின் தொடரும் முடிவு செய்தான். மறு நாள் அந்த தங்க மரவெட்டியை விற்று தீனா ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்கினான். அவன் பணக்காரன் ஆகி விட்டாலும் எப்போழுதும் போல தீனா வேலைக்குச் சென்றான். சேனா ஆற்றுக்குச் சென்று வேண்டும் என்றே கோடரியை ஆற்றில் தூக்கிப் போட்டான். தீனாவைப் போல் அவனும் கதறி அழுதான். தேவதை அவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணினாள். அவள் முதலில் இரும்பு மரவெட்டியைக் காண்பித்தாள். அவன் இல்லை என்று சொன்னான். தேவதை வெள்ளி மரவெட்டியைக் காண்பித்தாள். இல்லை என்றான். தேவதை தங்க மரவெட்டியைக் காண்பித்தாள். ஆமாம் இது தான் என்னுடையது என்றான். தேவதைக்கு கோபம் வந்தது. என்னிடமே பொய் சொல்கிறாயா என்று சொல்லி கோடரியோடு மறைந்து விட்டாள். அவன் தன்னை மன்னித்து விடச் சொல்லி கதறி அழுதான். அந்தக் கதறலுக்கு எந்த பதிலும் இல்லை. சேனா தன்னிடம் இருந்த ஒரே சொத்தான கோடரியையும் இழந்து வீட்டிற்குத் திரும்பினான். அவனுக்கு நல்ல பாடம் கிடைத்தது.

அமைதியாக அமர்தல்
  • நான் எப்பொழுதும் உண்மையே பேசுவேன். நான் ஒருகாலும் பொய் சொல்லமாட்டேன். இறைவா! என்னுடைய இந்த வாக்குறுதியைக் காப்பாற்ற தயவு செய்து தாங்கள்தான் எனக்கு உதவி செய்யவேண்டும்.