வகுப்பு 21 – இறைவன் எப்பொழுதும் உதவிக்கு வருவார்

வகுப்பு 21 – இறைவன் எப்பொழுதும் உதவிக்கு வருவார்
நாம் எதற்காகவாவது பயப்பட வேண்டிய அவசியம் உள்ளதா? பகவான் உன்னை மிகவும் நேசிக்கிறார். எப்பொழுதெல்லாம் உனக்கு பயமாக இருக்கிறதோ அல்லது தனிமையை உணர்கிறாயோ, அப்பொழுதெல்லாம் கடவுளை நினை. மேலும் அவரை உதவிக்கு அழைத்துக்கொள்.

கதை : கஜேந்திர மோக்ஷம்

கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூட மலையில் உள்ள யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது. ஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கிச் சென்றது. அப்பொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களைப் பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்குப் போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரைத் தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே எனப் பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது.

தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையைத் துண்டித்து யானையை விடுவித்துக் காப்பாற்றினார். அதன் பிறகு, அந்த யானை எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.