வகுப்பு 2 – மீள் பார்வை

வகுப்பு 2 – மீள் பார்வை

கராக்ரே திருப்புதல்

கதை : அழகான கைகள்


 

ஒரு முறை கடவுள் தேவதையை அனுப்பி “நல்ல அழகான கையை உடைய ஒரு மனிதனை அழைத்து வா” என்று அனுப்பினார். அந்த தேவதை நள்ளிரவில், இவ்வுலகத்துக்கு வந்த அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அருகில் சென்று அழகான கையை உடையவர் யார்? என்று பார்க்க முதலில் அரண்மனைக்குச் சென்றது. இராணியின் கையைவிட யார் கை அழகாக இருக்க முடியும் என்று நினைத்து உள்ளே சென்றது. இராணியின் கைகள் வாசனைத் திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டு, நிறைய ஆபரணங்களையும் அணித்திருக்கும் அன்றோ! ஆகவே முதலில் இராணியின் கைகள், பிரபுக்கள், சிற்றரசர்கள், வியாபாரிகள் இன்னும் பலரது கைகளையெல்லாம் தேவதை சென்று பார்த்தது. ஆனால் தேவதைக்கு பெருத்த ஏமாற்றமே. இறைவன் தனக்கு இட்ட பணியை முடிக்கவில்லையே என வருத்தத்துடன் இருந்த போது, திடீரென நல்ல நறுமணம் வீசியது. நள்ளிரவாக இருந்தால் எங்கு யாரிடமிருந்து நறுமணம் வீசுகிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. தேடி அலைந்தபின் தூரத்தில் ஒரு விவசாயி பாயை விரித்து வயலில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று தேவதை பார்த்த போது அவரது உள்ளங்கைகள் உரமேறி, கரடுமுரடாக இருந்தாலும் நல்ல ஒளியும் நறுமணமும் வீசியது. கைகள் பார்ப்பதற்கு சுருக்கம் விழுந்து மிகுந்த உழைப்பினால் நிறம் மாறியிருந்தாலும் அந்த கைகள் தாம் தேடி வந்த கைகள் என்று தேவதை உணர்ந்து, அந்த விவசாயியை இறைவனிடம் அழைத்துச் சென்றது.

தேவதை இறைவனை நோக்கி அரசன் அரசியின் கைகளை விட இந்த விவசாயி அழகான கைகளை பெற்றிருக்க காரணம் கேட்டது. இறைவன் தேவதையைத் தேர்ந்தெடுத்தது தகுதியான கைகள் தாம் எனக் கூறினார். மேலும் அந்த கைகள் வயல்களில் மிகக் கடுமையாக உழைத்து தானியங்களை விளைவித்தார். தானும் பல வளங்கள் பெற்றார். தேவைபட்டவர்களுக்கும் கொடுத்து உதவினார். பெருமைபட்டுக் கொள்ளாமல் இறைவனை எப்போதும் கூப்பிய கைகளுடன் வணங்கினார். புனித காரியங்களை அந்த கைகளால் செய்தார். ஆகவே அவர் இறைவனை அடைந்து இறைத் தன்மையையும் பெற்றார்.

செயற்பாடு
  • நமது கைகளைக்கொண்டு நாம் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள்.
அமைதியாக அமர்தல்
  • இறைவா! என் கைகளை அழகாக்குங்கள். நான் என் கைகளை வைத்து நற்செயல்களையே செய்வேன். அவற்றைத் தீய செயல்கள் செய்ய உபயோகப்படுத்தமாட்டேன்.