வகுப்பு 17 – இயற்கை, மிருகங்கள், பறவைகள்

வகுப்பு 17 – இயற்கை, மிருகங்கள், பறவைகள்

உதயமாகும் மற்றும் அஸ்தமிக்கும் சூரியன், அழகிய நிலவு, ஜொலிக்கும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண மலர்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு ஒரு கடற்கரையில் விளையாடுவது உனக்குப் பிடிக்குமா? இவற்றையெல்லாம் நமக்கு யார் கொடுத்தது யார்? இறைவனே, நாம் அனுபவிப்பதற்காகவும், அவர் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவும் இவற்றை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

உனக்குத் தெரிந்த மிருகங்களை நினைத்துப்பார் – புத்திசாலிப் பூனை, குட்டி எலி, அழகான நாய்க்குட்டி, மென்மையான பசு, ரோமமிக்கக் கரடி, பெரிய சிங்கம், வேடிக்கையான குரங்கு, பெரிய கழுகு, அறிவாளிக் கிளி, மேலும் அழகழகான பறவைகள், மிகப் பெரிய திமிங்கிலம், குட்டி குட்டி மீன்கள், வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள், மற்றும் பல. உங்களுக்குத் தெரியுமா? இந்த மிருகங்களுக்கும் நம்மைப் போல் உணர்வுகள் உண்டு, ஆனால் அவற்றால் பேச முடியாததால் அந்த உணர்வுகளை அவைகளால் வெளிக்காட்ட முடியவில்லை. அதனால், நாம் அவைகளைத் துன்புறுத்தக்கூடாது.

பாடல்
THE HONEY BEE

“Have you seen a Honey Bee”

“Have you seen a Honey Bee
It is always so very busy
Buzzbuzz, humm,humm
Do you know where does a Honey bee go?
He goes to every flower and says Hello!
Buzz buzz ,humm, humm
Do you know what does a Honey bee do?
He kisses every flower and drinks sweet nectar
Buzz buzz, hum, humm
Do you know what a Honey bee will give
He kisses every flower and gives it a fruit
Buzz buzz, humm, humm

தேனீ நீயும் பார்த்தாயா! சுறுசுறுப்பாக சுற்றித்திரியும் தேனீயை நீயும் பார்த்தாயா! ஹம் ஹம் ஹம் ரீங்காரம்! தேனீ எங்கு செல்கிறது? மலருக்கு மலர் அது செல்கிறது. தேனீ என்ன செய்கிறது? தேனைப் பருகி, மலரை முத்தமிடுகிறது! தேனீ என்ன கொடுக்கிறது? முத்தமும் கனியும் கொடுக்கிறது! ஹம் ஹம் ஹம் ரீங்காரம்!

செயற்பாடு
  • ஒரு மலர் வரைந்து வண்ணம் தீட்டவும்.
அமைதியாக அமர்தல்
  • இறைவா! சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நதிகள், மலைகள், மரங்கள், மலர்கள், மிருகங்கள், பறவைகள் இவற்றையெல்லாம் அளித்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. நான் எப்பொழுதும் இவற்றையெல்லாம் பாதுகாப்பேன், அவற்றிற்கு இடையூறு செய்யமாட்டேன்.