வகுப்பு 15 – தூய்மை

வகுப்பு 15 – தூய்மை
தெய்வீகத்துக்கு அடுத்தது தூய்மையே

நாம் நம் எண்ணத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நம் உடலை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சுத்தமானவர்களின் அருகாமையை நாம் விரும்புகிறோம். அதே சமயம் அழுக்கானவர்களை தவிர்க்கிறோம். கழிவறைக்கு சென்று வந்த பின் கைகளை சுத்தமாகக் கழுவுதல், சாப்பிடுவதற்கு முன் கழுவுதல் ஆகிய பழக்கங்கள் மூலம், வாந்திபேதி போன்ற வயிற்று பிரச்னைகளை நிறுத்தமுடியும். நம் கைகள் மிக சுத்தமாக இருப்பது போல் தோன்றினாலும் கூட, நம்மை நோய்வாய்ப்படுத்தும் சிறுசிறு கிருமிகள் இருக்கும்.

கதை : அனிலும், கால்பந்தும்

ஒரு நாள் அனில் தன் கால்பந்தை எடுத்துக்கொண்டு வந்து தன் நண்பனிடம், “வா, நாம் வெளியில் சென்று விளையாடலாம்” என்று கூறி அழைத்தான். இருவரும் வெகு நேரம் சந்தோஷமாக விளையாடினர். கடைசியில் அனில் பந்தை ஒரு உதைவிட்டான், அது மேலே உயரச் சென்று ஒரு குட்டையில் விழுந்தது. அந்த குட்டையிலிருந்த தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. ஏனெனில் அது ஒரு குப்பைக் குவியலிலிருந்து வந்தது. அனில் அந்தப் பந்தை எடுத்து வந்து ஒன்றிரண்டு உதைகள் விட்டான். கைகள் ஈரமாகவும் அழுக்காகவும் இருந்ததால் அப்படியே கால்சட்டையில் துடைத்துக் கொண்டான். அவன் நண்பன், “ எனக்கு மிகவும் பசிக்கிறது, சாப்பாட்டு வேளை வந்து விட்டது” என்று கூறினான். ஆம், எனக்கும் பசிதான், வா வீட்டிற்கு போகலாம் என்றான் அனில். அவன் பந்தை எடுத்துக்கொண்டான். இருவரும் வீட்டிற்கு ஓடிவிட்டனர். வீட்டிற்குச் சென்றவுடன், அனில் சமயலறைக்குள் நுழைந்தான். அம்மா, ”இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்? நாங்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டோம். இருந்தாலும், உன்னை மறக்க வில்லை, லன்ச் பாக்சில் சாண்ட்விச் வைத்துள்ளேன்.” அனில் அதைப் பிடுங்கிக் கொண்டு வேகமாக சாப்பிட வெளியேறினான். அதற்குள் அம்மாவும் வெளியே வந்தார், ”நல்ல வேலை செய்தாய் நீ எவ்வளவு அழுக்காக இருக்கிறாய். சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவினாயா?” என்று கேட்டாள். “ஓ நான் மறந்தே விட்டேன்” என்று கூறினான் அனில். இரவு அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகி விட்டது. வயிற்று வலியும், வாந்தியும் வந்து அவதிப்பட்டான். அவன் அம்மா அவனுக்கு உதவினாள், காலையில் சற்று நலமடைந்தான். ஆனாலும் பலகீனமாகி விட்டான். அம்மா, “சுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியமென்று நான் உனக்கு மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறேன், நேற்று நீ சாண்ட்விச் சாப்பிடும்பொழுது உன் கைகள் எவ்வளவு அழுக்காக இருந்தன என்று எனக்குத் தெரியும். இதிலிருந்து நீ ஒரு பாடம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவு, அதிலும் குறிப்பாக வெளியில் விளையாடிவிட்டு வந்த பிறகு” என்று கூறி முடித்தாள்.

பாடல்

“Hear we go”

Here we go round the values tree, The values tree, the values tree Here we go round the values tree On a bright and frosty morning. This is the way we brush our teeth, Brush our teeth, brush our teeth This is the way we brush our teeth To keep them bright and shining. This is the way we comb our hair …. To keep them neat and tidy.

This is the way we take a bath…. To look fresh and charming. This is the way we clean our room …. So properly and handy. This is the way we eat our food…. Which makes us strong and healthy. Come on let us pray to God… Who keeps us always happy.