வகுப்பு 14 – ஆரோக்கியமும் சுகாதாரமும்

வகுப்பு 14 – ஆரோக்கியமும் சுகாதாரமும்

சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருத்தல். சுத்தம் என்பது அழுக்கற்ற நிலை. நேர்த்தி என்பது ஒழுங்காக அது அது அந்தந்த இடத்தில் இருப்பது. நீ குளித்தால் சுத்தமாகி விடுவாய். ஆனால் தலை சீவாமல் இருந்தால் நீ நன்றாக காட்சியளிப்பாயா? இல்லை. நீ சுத்தமாக இருப்பாய். ஆனால் நேர்த்தியாக இருக்கமாட்டாய். நீ அழகாக உடையுடுத்தி, தலை சீவியிருந்தாயானால் அப்போது நீ சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாகக் கொள்ளலாம்.

அனைவரும் சுத்தமான நேர்த்தியான குழந்தைகளையே விரும்புகின்றனர். ஆனால் இது மட்டும் போதாது. நீ உன்னுடைய பொருட்களை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் உனக்கு வேண்டிய பொருளை நீ தேட வேண்டியிருக்காது.

கதை : அரச குதிரையும், அதன் குளியலும்

முன்னொரு காலத்தில் ஒரு அரசனிடம் ஒரு அருமையான குதிரை இருந்தது. அவன் அதனை மிகவும் நேசித்தான். அந்த அரச குதிரை எப்போதும் ஒரு குறிப்பிட்ட சுத்தமான குளத்தில் தான் குளிக்கும். ஒரு நாள் காலை ஒரு அழுக்கான குதிரை அந்த குளத்தில் குளிப்பாட்டப்பட்டிருந்தது. அரச வீரர்கள் அரச குதிரையை அதே குளத்தில் குளிக்க அழைத்து வந்த போது, அது குளத்தில் இறங்க மறுத்தது. வீரர்கள் குதிரையை குளத்தில் தள்ள முயற்சித்தார்கள், எனினும் அது அவர்களை உதைத்து, தள்ளியும் விட்டது. அரச மாளிகைக்கு திரும்பிய வீரர்கள் குதிரைக்கு, பைத்தியம் பிடித்து விட்டதாக அரசனிடம் கூறினர். அரசர் தன் அறிவார்ந்த மந்திரியை குளத்திற்கு அனுப்பி, அது அவ்வாறு விசித்திரமாக நடந்து கொள்ள என்ன காரணம் என அறிந்து வர செய்தார். குதிரை தன் மூக்கை மூடிக்கொள்ள முயற்சிப்பதை கண்டார் மந்திரி. குளத்து நீர் அசுத்தமாக உள்ளதை உணர்ந்தே குதிரை அவ்வாறு நடக்கிறது என்பதை மந்திரி தெரிந்து கொண்டார். குதிரையை சுத்தமான நீர் உள்ள குளத்திற்கு அழைத்துச் செல்ல வீர்ர்களுக்கு கட்டளையிட்டார். அந்த சுத்தமான குளத்தில் குதிரை ஆனந்தமாக தண்ணீரை வாரியிறைத்துக்கொண்டு குளித்தது. நாம் எப்போதும் நமது சுற்றுப்புறத்தை, உடலை, மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாகவும், சுத்தமாகவும் இருப்பது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.