வகுப்பு 12 – மரியாதை

வகுப்பு 12 – மரியாதை

தாத்தா, பாட்டியை மதித்தல்
கதை

முன்னொரு காலத்தில் ரொமேனியா நாட்டு மக்கள் முதியோர்களை தேவையில்லாத சுமை என்று நினைத்தனர். அவர்கள் பலஹீனர்களாகவும் முதியவர்களாகவும், எந்த வேலையையும் செய்ய முடியாதவர்களாகவும் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு என்ன பிரயோஜனம்? அவர்கள் ஏற்கனவே அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து விட்டார்கள். எனவே நாட்டிலுள்ள அனைத்து முதியவர்களையும் கொன்றுவிட தீர்மானித்தனர். நாட்டிலுள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவரையும் கொல்ல உத்தரவிடப்பட்டது. ஏராளமான அறிஞர்களும், முதியவர்களும் கொல்லப்பட்டு ஞானம், அறிவு மற்றும் அனுபவத்தின் களஞ்சியம் அழிக்கப்பட்டது.

ஒரு இளைஞனுக்குத் தன் தந்தையிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் இருந்தது. அவன் அவர் கொல்லப்படுவதை விரும்பவில்லை. அவரை ஒரு சிறிய அறையில் ஒளித்து வைத்து நன்கு பராமரித்தான், கஷ்டம் வரும்போதெல்லாம் தன் தந்தையிடம் கலந்து ஆலோசித்தான். ஒருவருக்கும் அவர் உயிர் வாழ்வது தெரியாது.

வருடங்கள் உருண்டோடின. நாட்டில் கடுமையான வரட்சியும் அதனால் பஞ்சமும் ஏற்பட்டது. மக்கள் ஏராளமான கஷ்டங்கள், துன்பம் வியாதி இவற்றை அனுபவித்தனர். தானியக் கிடங்குகள் முழுவதும் தீரந்தன. ஒரே ஒரு தானியம் கூட நிலத்தில் விதைப்பதற்காக விட்டு வைக்கப்படவில்லை. இந்த பிரச்னையை சமாளிக்க உதவியற்றவராயினர். அனைவரும் கவலையுற்றனர்.

இந்த முதியவர், அனைத்தையும் தன் பதுங்கு அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். கவலைக்குக் காரணம் என்னவென்று மகனை வினவினார்.

நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்னையைப்பற்றி மகன் கூறினார். முதியவர், சிறிது நேரம் யோசித்து பின் கூறினார். “கவலைப்படாதே, மகனே. இப்போதைக்கு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். உன் கலப்பையை எடுத்துக்கொள். வீட்டு வாசலில் தெருவில் உழு. பிறகு மகன் தன் தந்தையின் சொற்படியே செய்தான்.

மழை வந்தது. கோதுமை, பார்லி, ஓட்ஸ் மற்றும் துவரை செடிகள் பூமியில் சில இடங்களில் முளைவிட்டு வளர்ந்தன. விரைவிலேயே, கேள்விப்படாத இந்த செய்தி எங்கும் பரவியது. எதுவும் விதைக்காமலேயே ஒரு மனிதன் அறுவடை செய்வதைப் பார்த்து, மக்கள் வியந்தனர். இந்த முதியவர் தன் மகனை ஏன் அவ்வாறு செய்யச் சொன்னார் என்றால் அவர் தன் அனுபவத்தில், மக்கள் அறுவடை முடிந்து வீட்டுக்கு தானியத்தை எடுத்து வரும்போது அவை வழியில் சிந்துவதை அறிந்திருந்தார். கண்டிப்பாக சில தானியங்கள் விழுந்து கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கும் என நம்பினார். அவர் கூற்று சரியே என நிரூபணமாயிற்று.

இந்த ஞானத்தின் ரகசியம் என்னவென்று அறிய அந்த பையன் அரசரால் அழைக்கப்பட்டான். நீண்ட தயக்கத்திற்கு பிறகு, தான் தன் தந்தையின் அறிவுரைப்படி அவ்வாறு செய்ததாக கூறினான். முதியவரின் அறிவைக் கண்டு வியந்து போனான் அரசன். அவருக்கு சன்மானம் வழங்கும் பொருட்டு அவரை அரசவைக்கு அழைத்துவரக் கூறினான். கடைசியில் இந்த முதியவரே, தன் புத்திகூர்மையால் நாட்டின் அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார், இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அந்த நாட்டு மக்கள் முதியவர்களை கொல்லவில்லை. மாறாக அவர்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தினர். அவர்களை நாட்டின் பொக்கிஷமாக பாதுகாத்தனர்.

கதையின் நீதி

உன்னுடைய பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும், உன்னுடைய அன்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. வயதான காலத்தில் அவர்களுக்கு எதுவும் அதிகம் செய்யத் தேவையிருக்காது. ஆகவே தனிமையாக இருப்பதாக உணர்வர். அவர்களுக்கு உன் தோழமை தேவைப்படுகிறது. வயதானவர்கள் உடல் பலகீனமாகவும் செயலற்றும் இருப்பர். முதுமை அவர்களது மனதையும் பாதிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் போல் நச்சரிக்கின்றனர். குழந்தை போல் உன் கவனத்தை ஈர்க்கின்றனர். இளையவர்கள் பல நேரங்களில் இதுபோன்ற அவர்களது நடவடிக்கை மாற்றத்தை புரிந்து கொள்வதில்லை.

நீ பார்த்துக்கொள்வது மட்டுமல்லாது உன்னுடைய தோழமையும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்களுடன் அமர்ந்து உன் தோழமையை நல்கு. நாம் ஒரு தேவையற்ற சுமையல்ல, மிகவும் தேவையானவர்களும் விரும்பப்படுபவர்களுமே என்று அவர்கள் உணரும்படி செய். அவர்கள் தேவையானவர்கள், மதிப்பிற்குரியவர்கள், நேசிக்கப்படுபவர்கள், அக்கறை கொள்ளப்படுபவர்கள் என்று அவர்களை உணரச்செய். அவர்களின் வழி நடத்தலும், வாழ்த்தும் உனக்கு வாழ் நாள் முழுதும் வேண்டுமென்றால், அவர்களை சந்தோஷமாக வைத்திரு.

செயற்பாடு
  • தாத்தா பாட்டிக்கு வாழ்த்து அட்டை தயாரித்தல்.