வகுப்பு 11 – அன்னையே உனது முதல் குரு

வகுப்பு 11 – அன்னையே உனது முதல் குரு
கதை : கோகிலா விரதம்

காந்தியின் தாயார் புத்லிபாய் தினந்தோறும் கோகிலா விரதம் என்னும் ஒரு விரதத்தை அனுஷ்டித்து வந்தாள். விரத சடங்குகள் முடிவுற்றதும் உணவு உண்பதற்கு முன் ஒரு குயிலின் குரலுக்காகக் காத்திருப்பாள். குயிலின் இனிய குரலோசை கேட்காத பட்சத்தில் உணவைத் தீண்டவும் மாட்டாள். ஒரு நாள் வெகு நேரம் காத்துக் கொண்டேயிருந்தாள், அந்த அதிருஷ்ட பறவை, உணவை உண்பதற்காக அனுமதி கொடுக்குமென்று. அவள் அமைதியாக ஜன்னலுக்கருகே அமர்ந்து குயிலின் குரலுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால், அந்தோ! எதுவும் நடக்கவில்லை. சிறுவனான காந்தி, தன் தாய் வருத்தமுடன் ஜன்னலருகே அமர்ந்திருந்ததைக் கண்டான். உடனே மனதில் ஒரு திட்டம் தீட்டிக் குயிலின் இனிய குரலோசையைத் தானே போலியாக உண்டாக்கும் பொருட்டு வீட்டை விட்டு வேகமாக வெளியே வந்தான். ஒருசெடி புதரின் பின்னால் மறைந்து குயில் போல் குரலிசைத்துப் பின்னர் வீட்டுக்குள் ஓடிவந்து, “அம்மா, இப்போது நீங்கள் சாப்பிடலாம், குயிலின் குரல் கேட்டு விட்டது” என்றான். காந்தியின் அம்மா, இந்த விரத சடங்குகளை நீண்ட காலமாகக் கடைபிடித்து வந்தாள். அவள் காந்தியின் குறும்பை உடனடியாகக் கண்டு பிடித்து விட்டாள். தாங்க முடியாத துக்கத்துடன் காந்தியை அடித்து, “நான் என்ன பாவம் செய்தேனோ, இதுமாதிரி ஒரு பொய்யன் எனக்கு மகனாகப் பிறப்பதற்கு, இறைவா!” என்று புலம்பினாள்.

அவளுடைய பனித்த கண்களும் நொறுங்கிய இதயமும் காந்தியை ஆழமாக பாதித்தது. அன்று தாயிடம் சபதம் செய்தார், “இன்றிலிருந்து, நான் முற்றிலும் பொய்மையை விட்டு விட்டேன்; என்னுடைய தாயின் மென்மையான இதயத்தை பாதிக்கும் எந்த செயலையும் இனிமேல் செய்ய மாட்டேன்”. இவ்வாறு தொடங்கியது உண்மையின் சகாப்தம்.

விளையாட்டு: MOTHER SAYS
ஏதாவது ஒரு செயலை, ‘Mother Says’ என்று குறிப்பிட்டவுடன் செய்ய வேண்டும்.