வகுப்பு 10 – பெற்றோர் வாழும் தெய்வங்களே

வகுப்பு 10 – பெற்றோர் வாழும் தெய்வங்களே

சிரவணகுமாரனின் கதை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது பாரத தேசத்தில் சிரவணகுமாரன் என்னும் பெயருடைய சிறுவன் இருந்தான். அவனுடைய பெற்றோர் முதுமையின் காரணமாக கண் பார்வையை இழந்து விட்டிருந்ததால் சிரவணகுமாரன் அவர்களை கூடையில் வைத்து ஒரு கழியில் காவடிபோல் கட்டித் தூக்கிச் செல்வான். வெகு காலம் இவ்வாறு அன்புடனும், பக்தியுடனும் சேவை செய்து வந்தான். பெற்றோரும் அவனை மிகவும் நேசித்தார்கள்.

புண்டலிகனின் கதை

பல நூறாண்டுகளுக்கு முன்னர், மகாராஷ்ட்ர மாநிலத்தில் புண்டலிகன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். அவனும் பெற்றோர்க்கு பக்தியுடன் சேவை செய்து வந்தான்.

ஒவ்வொரு நாளும் இரவில் தந்தையின் கால்களை பிடித்து விடுவான். ஒரு நாள் இரவு, அவன் தன் தந்தைக்குச் செய்யும் சேவையில் மகிழ்ந்த இறைவன் அவனை ஆசிர்வதிக்க, அவன் அறைக்குள் ப்ரசன்னமானார். அப்போது புண்டலிகன், தன் தந்தையின் பாதங்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் தூக்கத்தில் ஆழ்ந்த தன் தந்தையைத் தொந்தரவு செய்ய விரும்பாத புண்டலிகன், தன் சேவையை நிறுத்தாமல், ஒரு செங்கல்லை இறைவன் பக்கம் தள்ளி, “இறைவா, தயவு செய்து என் தந்தை கண்ணுறங்கும் வரை காத்திருங்கள்” என்றான்

இறைவன் பாண்டுரங்கன் அந்த கல்லின் மீது நின்றுக்கொண்டு காத்திருந்தான். புண்டலிகன் ஒருவழியாக சேவையை முடித்தான். வந்து விட்டோபாவை வணங்கினான். விட்டலன் அவனை ஆசிர்வதித்து அவன் வேண்டும் வரத்தைக் கோருமாறு கூறினார்.

புண்டலிகன் வேண்டினான், ”இறைவா, தங்கள் தரிசனத்தால் என்னை ஆசிர்வதித்து விட்டீர்கள். இனி இங்கே நின்று உங்கள் தெய்வீக தரிசனத்தை அனைவருக்கும் நல்குங்கள்.”

அமைதியாக அமர்தல்
  • நான் எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருப்பேன். ஒரு நாளைக்கு இருவேளையும் பல் துலக்குவேன், தினந்தோறும் குளிப்பேன்.