வகுப்பு 1 – கடவுள் என்பவர் யார்?

வகுப்பு 1 – கடவுள் என்பவர் யார்?
சின் முத்திரை
  • கட்டைவிரல் – கடவுள்
  • ஆள்காட்டிவிரல் – நீ
  • மற்ற 3 விரல்கள் – தாய், தந்தை மற்றும் குரு – அவர்கள் உனக்குக் கடவுளைப் பற்றி அறிய உதவுவார்கள்.
ஓம்
  • இறைவனுடைய தொலைபேசி எண்
ஓம்காரம் ஜபிக்கும் முறை – விமானம்

இந்த உலகமனைத்தையும் படைப்பவர் இறைவனே. நாம் அவரை எங்கு காணலாம்? கடவுள் விண்ணில்(விண்கலன்) இருக்கிறாரா?, கடலில்(நீர்மூழ்கி), மலையில், வனத்தில். படங்கள் மற்றும் வரைபடங்கள் வைத்து விளக்கிக் காட்டுங்கள். இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் சூரியனில், நிலவில், வனம் மற்றும் வயல்களிலும் இருக்கிறார். உன்னுள்ளும் மற்றும் அனைவரிடமும் இருக்கிறார். அவர் மிருகங்களிடமும், பறவைகளிடமும் கூட இருக்கிறார். ஒரே கடவுள்தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறார்.

ஸ்லோகம்

 

“கராக்ரே வஸதே லக்ஷ்மி”

 

  • கராக்ரே வஸதே லக்ஷ்மி, கர மத்யே சரஸ்வதி
  • கர மூலே து கோவிந்தா, ப்ரபாதே கர தர்சனம்
வரைபடம் வைத்து ஸ்லோகத்தை விளக்கவும்

ஸ்லோகம் கற்பிக்க அனுமதியில்லை என்றால், கீழ்கண்டவாறு விளக்கலாம்
  • விரல் நுனிகள் – செல்வம்
  • உள்ளங்கையின் நடுப்பகுதி – அறிவு
  •  உள்ளங்கையின் அடிப்பகுதி – பாதுகாப்பு
செயற்பாடு

குழந்தைகள் வட்டவடிவமாக நிற்க வேண்டும். விளையாட்டின் தலைவன் தான் நடுவர் (ஜட்ஜ்). எல்லா குழந்தைகளும், வட்டத்தின் உட்புறத்தை நோக்கி, கையை நீட்ட வேண்டும். உள்ளங்கை மேற்பக்கம் இருக்க வேண்டும் சாயி என்று சொல்லும்போது உள்ளங்கை மேற்பக்கம்(வானத்தை பார்த்தபடி) இருக்க வேண்டும். ராம் என்று சொல்லும்போது உள்ளங்கையை கவிழ்த்து போட வேண்டும்(தரையை பார்த்த படி) இதை மாற்றி செய்தால் அவுட். அவுட் அனால் அவன் வெளியேறவேண்டும் ராம்- சாய்- சாய் ராம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கடைசியில் மீந்து இருப்பவனே வெற்றியாளன்.

அமைதியாக அமர்தல்
  • ‘ஓம் ஸ்ரீ சாய்ராம்’ ஜபித்தல்