ரக்க்ஷா பந்தன்

ரக்க்ஷா பந்தன்
ரக்க்ஷா பந்தன்

சகோதரி ஒருத்தி தன் சகோதரன் தனக்கு பாதுகாப்பளித்து கவனித்துக் கொள்ள உறுதி பெறும் அடையாளமாக அவனது கரத்தில் கயிற்றைக் கட்டும் விழாவாகக் கொண்டாடப் படும் நாள் ரக்க்ஷா பந்தன் ஆகும்.

கதை – 1
கிருஷ்ணரும் த்ரௌபதியும்:

அனேகமாக ரக்க்ஷா பந்தன் கதைகளிலேயே மிகவும் ப்ரசித்தி பெற்றதாக நமது புராணங்களில் கூறப்படுபவை பகவான் கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவரின் மனைவியான த்ரௌபதியும் கொண்டிருந்த அன்பைப் பற்றியதாகும்.

அவர்தம் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வே மகாபாரதத்தின் பல்வேறு கதைகள் அனைத்துக்கும் மேலானதாக நினைவில் இருத்திக் கொள்ளப்படுகிறது. ஞானி ஒருவரின் கூற்றுப்படி ஒரு சங்கராந்தி தினத்தன்று கிருஷ்ணர் கரும்பை வெட்டும் போது தனது சுண்டு விரலையும் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டதாகக் காட்சியளிக்கிறார்.

உடனே அவரது பட்டமகிஷியான ருக்மிணி காயத்தை ஆற்ற துணி கொண்டுவரப் பணியாளரைப் பணிக்கிறாள்;

இன்னொரு பட்ட மகிஷியான பாமா தாமே துணியை எடுத்து வரச் செல்கிறாள்.

இதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த த்ரௌபதியோ மற்றவரையும் விட மிக எளிதாகத் தம் சேலையின் பகுதியைக் கிழித்து அவரது விரலைக் கட்டுகிறாள். இச் செயலுக்குப் ப்ரதி உபகாரமாக கிருஷ்ணர் அவளுக்குத் துன்பம் நேரும் சமயத்தில் காப்பாற்றுவதாக வாக்களிக்கிறார். அன்று அவர் கூறியதாக நமக்குத் தெரிவிக்கப்பட்ட வார்த்தை,”அக்க்ஷயம்”; “முடிவற்றதாகுக” எனும் பொருள் கொண்ட இவ் வார்த்தை ஒரு வரப்ரஸாதமாகும்: அதனால்தான் த்ரௌபதியின் சேலை முடிவற்றதாகி த்ருதராஷ்ட்டிரரின் அரசவையில் இருந்த அனைவர் முன்னிலையிலும் அவள் அவமதிக்கப்படும் மிகச் சங்கடமான நிலையில் இருந்து காப்பாற்றச் செய்தது.

கதை- 2
ராணி கர்ணாவதி மற்றும் சக்ரவர்த்தி ஹுமாயூன்

ரக்க்ஷா பந்தன் கதைகளிலேயே ராணி கர்ணாவதி மற்றும் சக்ரவர்த்தி ஹுமாயூன் ஆகிய இவர்தம் கதை அடிக்கடி நினைவு கொள்ளப்படுவதாகும்.

ராணி கர்ணாவதி, அவளது கணவனும் மேவார் நாட்டு ராஜாவுமாகிய ராணா சங்கா இறந்து விட்டதைத் தொடர்ந்து நாட்டை ஆள்பவராகிறாள். அவள் தன் மூத்த மகன் விக்ரம்ஜித்தின் பெயரால் ஆட்சி நடத்துகிறாள். குஜராத்தில் இருந்த பஹதூர்ஷா என்பவரால் இரண்டாம் முறையாக மேவார் நாடு தாக்கப்பட்ட போது (முதன் முறையாக விக்ரம்ஜித்தை தோற்கடித்திருந்தார்) ராணி தனது உண்மை விசுவாச வீரர்களிடம் சகாயம் வேண்டி வெளிவருகிறாள். ஆரம்பத்தில் அச்சம் கொண்டாலும் பிறகு அவர்கள் ஷாவைத் தோற்கடிக்க ஒப்புக் கொள்கிறார்கள்.

இதற்கிடையே கர்ணாவதி ஹுமாயூனிடமும் உதவி கேட்கிறாள். அவள் ராக்ஹி கயிறு ஒன்றை அனுப்பி பாதுகாப்பை வேண்டுகிறாள்.

இது இவ்வாறு இருக்க ஹுமாயூனின் தந்தை பாபர், ராணா சங்காவுக்கு எதிராக ராஜபுதன படைகளுடன்கூட்டு சேர்ந்து கொண்டு 1527-ல் அவரைத் தோற்கடித்திருந்தார்.

இந்த முகலாய சக்ரவர்த்தி உதவி வேண்டிய அழைப்பை ஏற்றுக் கொண்டபோது இன்னொரு படைக்கும்பலின் மத்தியில் இருந்தார். அப் படையைத் தோற்கடித்து மேவார் தேசத்தை நோக்கி திரும்பினார். துரதிர்ஷ்டவசமாக அவர் சரியான சமயத்தில் அவ்வாறு செயலாற்றவில்லை. சித்தூரில் நடந்த போரில் ராஜ்புதன படை தோற்கடிக்கப்பட்டதால், பஹதூர் ஷாவின் கரங்களுக்கு அகப்படும் மரியாதைக் குறைவான நிலையினின்று தம்மைக் காப்பாற்றிக் கொள்ள கர்ணாவதி “ஜாஹர்” எனப்படும் சுய பலியை மேற்கொள்கிறாள்.

உடனடியாக அங்கே முகலாய பாதுகாப்புப் படை வந்து சேர்ந்ததால் ஷா மேலும் முன்னேறிச் செல்ல இயலாமல் சித்தூரில் இருந்து பின் வாங்க நேரிட்டது.