வகுப்பு 9 – நம்பிக்கை

வகுப்பு 9 – நம்பிக்கை
கதை
கயிறு

மலைச் சிகரங்களின் உயரத்தினின்று இரவு வெகுவாக வீழ்ந்தது; மானிடர் இது எதையும் காண இயலுவதில்லை. ஆங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட காண முடியவில்லை; நட்சத்திரங்களும் நிலவும் மேகங்களால் சூழப்பட்ட நிலை.

மலை உச்சிக்குக் கீழ் சில அடிகள் இருக்கையிலேயே அவன் காற்றினுள் தவறி விழுந்து அதிவேகத்தில் விழுந்து கொண்டிருந்தான். கீழே செல்லச் செல்ல கரும் புள்ளிகளை மட்டுமே காணவும் புவியீர்ப்புக்குள் உறிஞ்சப்படுகின்ற பயங்கர நிலையை மட்டுமே உணரவும் முடிந்தது. விழுந்துகொண்டே இருந்தான் அவன்; பேரச்சமான அத்தகைய கணங்களில் தனது வாழ்க்கையின் நல்ல மற்றும் தீய நிகழ்வுகள் நினைவுக்கு வரக் கண்டான். தனது இடையைச் சுற்றியிருந்த கயிறு திடீரென தன்னை பலமாக இழுப்பதை உணர்ந்த போது மரணம் தன்னை நெருங்கி வருவதை எண்ணிப் பார்க்கிறான். அவனது உடல் காற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது. இப்போது அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது கயிறு ஒன்றே. சலனமேதுமற்ற அக்கணத்தில் “கடவுளே உதவுங்கள் எனக்கு” எனக் கதறுவதன்றி வேறு எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.

திடீரென வானத்தினின்று அசரீரி ஒன்று பதில் கூறியது: “நான் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாய்?”

“என்னைக் காப்பாற்றுங்கள் கடவுளே!”

“நான் உன்னைக் காப்பாற்றுவேன் என உண்மையாகவே எண்ணுகிறாயா?”

“இந்நிலையில் தங்களால் முடியும் என நம்புகிறேன்”.

“அவ்வாறெனில் உன்னைக்கட்டிக் கொண்டுள்ள கயிறை அறுத்துவிடு”.

அங்கே அமைதியான கணப்பொழுது நிலவியது. காலம் கடந்தது. அந்த மனிதன் தன் பலம் கொண்ட வரை கயிற்றைப் பிடித்துக் கொள்ளவே முடிவு செய்தான்.

அடுத்த நாள் அங்கு வந்த மீட்புக் குழுவினர், மலையேறியவர் பனியில் உறைந்த நிலையில் இறந்து கிடந்ததாகவும் அவரது உடல் கயிற்றில் தொங்கிய நிலையில் கரங்கள் கயிறை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறலாயினர். நிலத்துக்கு மேலே ஒரே ஒரு அடி உயரத்தில் தான் அந்த மனிதர் இருந்தார்.

அடுத்த நாள் அங்கு வந்த மீட்புக் குழுவினர், மலையேறியவர் பனியில் உறைந்த நிலையில் இறந்து கிடந்ததாகவும் அவரது உடல் கயிற்றில் தொங்கிய நிலையில் கரங்கள் கயிறை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறலாயினர். நிலத்துக்கு மேலே ஒரே ஒரு அடி உயரத்தில் தான் அந்த மனிதர் இருந்தார்.

நாம் நம் கயிறுகளுடன் எந்த அளவுக்குப் பிணைந்துள்ளோம்? நாம் கயிறைப் போக விடுவோமா?

ஒருபோதும் கடவுளின் மீது சந்தேகம் கொள்ளாதீர். கடவுள் நம்மை அதைத்தான் செய்யச் சொல்கிறார் எனில், அது மிகவும் முட்டாள் தனமான செயலாக இருந்தாலும் கூட நாம் போதிய நம்பிக்கை கொண்டு கயிறை அறுத்து விடத்தான் வேண்டும்.

பாடல்
தவறுகள் நடக்கும்

தவறுகள் நடக்கும் சமயத்திலே கஷ்டம் வருகின்ற சமயத்திலே இறைவா! உடனே இருந்து அருள் புரிவாய் எம்முடனே இருந்து அருள் புரிவாய்! உம்மைத் தவிர யாருமே எமக்கு இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! இறைவா எப்போதும் உடனே இரு என்னுடனே இரு! இரவு என்றிருக்கும் வரை நிலவும் இருக்கும் எந்நாளும்! எல்லாரும் என்னுடன் இருப்பார்கள்! கஷ்டம் என்று வருகையிலே நீரே எம்முடன் இருப்பீரே நீரே எம்முடன் இருப்பீரே நம்பிக்கை என்பது என் மனதில் காலம் காலமாய் சந்திப்பு! நம் சந்திப்பு! இதுவே மனதில் இருக்கிறது. காலம் காலமாய் நடக்கிறது நம் சந்திப்பு காலம் காலமாய் நடக்கிறது.