வகுப்பு 8 – பிரார்த்தனை

வகுப்பு 8 – பிரார்த்தனை
கதை
மாற்றம்

முதியவர் ஒருவர் தன் இளம் பேரனுடன் மலைகளினூடே தன் நிலத்தில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு காலை நேரத்திலும் சமையலறையில் அமர்ந்து தனது பிரார்த்தனையை படித்துக்கொண்டு கொண்டிருப்பார்.

அவரது பேரன் ஒவ்வொரு முறையிலும் அவரைப் போலவே நடக்க விரும்பினான். ஒரு நாள் பேரன் அவரிடம் ” தாத்தா! நான் தங்களைப் போன்றே பிரார்த்தனையைப் படிக்க முயற்சிக்கிறேன். ஆனால் எனக்குப் புரியவில்லை; எனக்குப் புரிந்தாலும் புத்தகத்தை மூடியவுடன் மறந்துவிடுகிறேன். பிரார்த்தனையைப் படிப்பதால் என்ன நன்மை விளையப் போகிறது?”என்றான்.

தாத்தா அமைதியாக கூடையில் இருந்த கரியை எடுத்து அடுப்பில் நிரப்பினார். பிறகு பேரனிடம் “இந்தக் கூடையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று கூடை நிறைய நீர் நிரப்பி எடுத்துக் கொண்டு வா” என்றார். சிறுவனும் அவர் கூறியதைப் போலச் செய்தான். ஆனால் அவன் எடுத்த நீர் அனைத்தும் வீட்டுக்கு வருவதற்குள் ஒழுகி விட்டது. இதைக்கண்டு நகைத்த தாத்தா “நீ கொஞ்சம் வேகமாக வர வேண்டும்” என்றார். அவனை மீண்டும் முயன்று நீர் எடுத்து வர ஆற்றுக்கு அனுப்பினார். இம்முறை சிறுவன் வேகமாக வந்தாலும் வீட்டுக்கு வருவதற்கு முன் கூடை காலியாகி விட்டது. மூச்சிறைக்கும் நிலையில் சிறுவன் கூடையில் நீர் கொண்டுவர இயலாது. எனவே, வாளியில் நீர் கொண்டு வருகிறேன் எனக் கேட்டான்.

முதியவர், “எனக்கு வாளியில் நீர் கொண்டு வரத் தேவையில்லை. கூடையில்தான் நீர் கொண்டு வர வேண்டும்” என்றார். “நீ கடினமாக முயற்சிக்கவில்லையே” பையன் மீண்டும் முயற்சி செய்கிறானா எனக் காண்பதற்காக வாயிலுக்கு வெளியே சென்றார். இப்பொழுது சிறுவன் இது இயலாது என்பதை அறிந்து, தான் எவ்வளவு வேகமாக ஓடி வந்தாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நீர் வழிந்து விடும் என்று காட்ட நினைத்தான். எனவே, மீண்டும் கூடையை நீருக்குள் ஆழ்த்தி எடுத்துக் கொண்டு மேலும் வேகமாக ஒடி வந்தான். தாத்தாவை அடைவதற்குள் கூடை மீண்டும் காலியாகி விட்டது. மூச்சிறைக்க இறைக்க, “பாருங்கள் இதை! இது பயனற்ற வேலை தாத்தா!” என்றான்.

“இது பயனற்ற வேலை என்று எண்ணுகிறாயா? கூடையைப் பார்”. சிறுவன் முதன் முறையாக கூடையைப் பார்த்தான். அது மிகவும் வேறுபட்டிருப்பதைக் கண்டு வியந்தான். கூடை அழுக்கு நிறைந்தது எனும் நிலை மாறி உள்ளும் புறமுமாக சுத்தமானதாக மாறியிருந்தது. “மகனே! நீ பிரார்த்தனையைப் படிக்கும் போது கூட இதுவே நிகழ்கிறது.http://demo3.esales.in:8081/ நீ ஒவ்வொன்றையும் புரியாதிருந்திருக்கலாம். ஞாபகத்திற்குக கூட வராதிருக்கலாம். ஆனால் நீ அதைப் படிக்கும் போது உள்ளும் புறமுமாக மாற்றமடைவாய். நமது வாழ்க்கையில் கடவுளின் பணி அதுவேயாகும்.” என்றார்.

பாடல்

ஹே இறைவா! நீரே எமது காவலர் நாமே உமது சேவகர்! நேரிய வழியில் செல்ல வேண்டும் நாங்கள் எப்போதும் நேரிய வழியில் செல்ல வேண்டும்! தீமையினின்றே தப்பிக்க வேண்டும்! இன்முகமாய் மூச்சை விட வேண்டும்! எப்போதும் இன்முகமாய் மூச்சை விட வேண்டும்! அச்சத்தால் ஏதும் சிந்திக்கவில்லை! கண்ணுக்கும் ஏதும் தென்படவில்லை! ஆனந்த வடிவம் சூரியனோ மறைந்து கொண்டே இருக்கின்றான்! அமாவாசை இருளை பௌர்ணமியாக்குமே உமது ஆற்றல்! பாதை நேரியதாகட்டும் எமது பாதை நேரியதாகட்டும்! தீமையினின்றும் காப்பீரே எமை அதர்மத்தினின்றும் காப்பீரே! தீமை செய்வோரிடையேயும் நன்மை செய்யும் சக்தி கொடு! எமக்கு நன்மை செய்யும் துணிவைக் கொடு.