வகுப்பு 7- மானிடரே விலங்குகளைவிட உயர்ந்தவர்

வகுப்பு 7- மானிடரே விலங்குகளைவிட உயர்ந்தவர்
கதை
சரியான செயல்பாடு (தர்மம்)

கடவுளின் படைப்பில் உயர் நிலையில் உள்ளவன் மானிடனாக இருப்பதால் வஞ்சக நரி சினம் கொண்டது. அது தாம் புத்திசாலியும் மனிதனை விடவும் நிறைவடைந்துள்ளதாகவும் எண்ணியது. நரியின் எண்ணப்படி விலங்குகள் மானிடரைவிட நற்குணங்கள் உடையன என்பதே. ஆகவே, அது காட்டில் உள்ள எல்லா விலங்குகளுடனும் ஆலோசித்து அவர்களுடைய கருத்துக்களைப் பெற்ற பின்பு உயர்ந்தவர் மானிடரா அல்லது விலங்குகளா என முடிவு செய்ய விரும்பியது. காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் கூடிய பிறகு காட்டிலேயே தங்களுடன் வாழ்ந்து வரும் பெரிய ஞானி அவர்களையும் அழைத்து வந்து அவருடைய கருத்துக்களையும் கேட்டு உறுதிப்படுத்த ஆலோசனை வழங்கியது. விலங்குகள் யாவும் இதை ஏற்றுக் கொண்டு ஞானியைக் காணச் சென்றன.

ஞானியும் சம்மதித்து கூட்டத்திற்கு வந்தார். முதலில் நாய் கூறியது” நான் நன்றிக்கு அடையாளம் ஆவேன். எனது வாழ்நாள் முழுவதும் மனிதனுக்கு நன்றியுள்ளவனாக இருந்து வருகிறேன். ஆனால் மனிதன் அவனுக்கு ஆற்றிய ஆயிரக்கணக்கான சேவைகளை மறந்து விட்டு தன் நண்பன் ஒரு தவறு செய்திருந்தால் கூட அதை ஞாபகத்திலேயே வைத்திருக்கிறான். ஐயா! மனிதன் விலங்குகளை விடவும் உயர்ந்தவன் எனத் தங்களால் கூற இயலுமா?”

இப்போது பசுவின் நியாயம்: “மனிதன் எனக்குச் சொற்ப அளவே வைக்கோலோ அல்லது புல்லோ உண்பதற்குக் கொடுக்கிறான். ஆனால் நானோ சத்தான பாலைக் கொடுக்கிறேன். சில நேரங்களில் அவன் என் கன்றைக்கூட பசியால் வாட விட்டு விட்டு எல்லா பாலையும் தமக்காகவும் தம் குழந்தைகளுக்காகவும் எடுத்துக் கொண்டு விடுகிறான். நான் பால் தர இயலாது வற்றிவிட்டால் என்னை உதாசீனப்படுத்தி இழிவாக நடத்துகிறான். நான் மூப்படைந்து விட்டாலோ கசாப்புக் கடைக்காரனுக்கு விற்கப் படுகிறேன். கூறுங்கள் ஐயா! மனிதன் விலங்கினத்தை விட உயர்ந்தவனா?”

அடுத்ததாக காகத்தின் முறை வந்தது. “நான் சிறிய ஒரு ரொட்டித் துண்டு கிடைக்கப் பெற்றாலும் கூட கரைந்து எனது நண்பர்கள் யாவரையும் அழைத்து அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். ஆனால் மனிதனோ மேலும் மேலும் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கிறான். பகிர்ந்தளிப்பதையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதையும் அவன் மறந்து விட்டான். சுயநலமும் பேராசையும் கொண்ட மனிதன் எவ்வாறு உயர்ந்தவன் என அழைக்கப்பட இயலும்?

மீன் காதோடு காதாகப் பேசியது: “ஒ ஞானி அவர்களே! நான் மனிதனுக்கு எவ்வித தீங்கும் இழைப்பதில்லை. குளங்கள், ஏரிகள், குட்டைகள் மற்றும் ஆறுகளில் அவனால் எறியப்படுகின்ற அழுக்கான பொருள்களை உண்டு தூய்மைப் படுத்துகிறேன். ஆனால், என்னைப் பாதுகாப்பதற்குப் பதிலாக முட்டாள் மனிதன் என்னைப் பிடித்துக் கொன்று உணவாக்கிக் கொள்கிறான். நீங்கள் மானிடனை அறிவிலி என்பீர்களா அல்லது உயர்ந்தவன் என்பீர்களா?”

கழுதை கனைத்தது: “நான் சுமப்பதற்கென்றே உள்ள ஜீவன். பொறுமை என்பதற்கு பெயர் போனவன். மலைப் பகுதியில் உள்ள மக்கள் எனது சேவை கிடைக்கப் பெறாவிடில் தவிப்பில் ஆழ்ந்து விடுவர். ஆனால் எனக்குக் கிடைக்கும் பரிசு என்ன? அடி மேல் அடி விழுதல்.

நாய் தனது ஒப்பற்ற தன்மையான மோப்ப சக்தியைப் பெருமையாகக் கூறியது. பருந்து தனது ஒப்பற்ற தன்மையான கூரிய பார்வையைப் பற்றி பெருமை கொண்டு பேசியது. பூனையோ, தான் மிகவும் தூய்மையைக் கடைபிடிப்பதாகவும் இருளிலும் தாம் கண்ணில் ஒளியுடன் இருப்பதைப் பெருமை கொண்டு பேசியது. யானை தனது புத்திசாலித் தனம் மற்றும் பயன்பாடு பற்றி தெரிவித்தது. இவ்வாறு முனிவரிடம் கூறிய யானை மானிடனின் உயர்வு நிலை குறித்து தங்கள் அனைவருக்கும் உபதேசிக்க வேண்டிக் கேட்டுக் கொண்டது.

இப்போது முனிவர் கூறினார்: “இக்காட்டில் வாழும் என் உறவினரே! கவனமாகக் கேளுங்கள். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. ஆனால் மானிடனோ விவேகம் என்னும் சக்தியைப் பெற்றிருக்கிறான். இது அவன் தவறானவற்றில் இருந்து சரியானவற்றையும் தீயவற்றில் இருந்து நல்லவற்றையும் பொய்மையில் இருந்து உண்மையையும் பிரித்தறிய உதவுகிறது. மானிடனால் தனது புலன்களைக் கட்டுப் படுத்த இயலும்; இதன் மூலமாக உள்ளுணர்வு பெற்று இறைவனுடன் ஐக்கியமாக முடியும். விலங்குகளாகிய நீங்கள் பிறவிக் குணங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறீர்கள்.

“ஆனால் மானிடனாக நடந்து கொள்ளாவிடில் அதற்கேற்ப செயலாற்ற வேண்டுமல்லவா?” என்றது வஞ்சக நரி.

முனிவர் கூறினார்: “மானிடனாக செயலாற்றுவதற்கு ஏற்ப நடக்காவிடில் அவனும் விலங்கை விட மோசமானவனே! அவன் மானிடனாக செயலாற்றுவதற்கேற்ப நடந்து கொள்வதால் அவனே படைக்கப்பட்ட அனைத்துக்கும் மிக உயர்வான இடம் பெறுகிறான்” என்று. இறுதியாக விலங்குகள் யாவும் மன நிறைவு கொண்டு சென்றன.

அன்பான குழந்தைகளே! உங்களுக்குள் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். “நான் ஒரு மானிடன்.