வகுப்பு 6 – உன்னை அறி

வகுப்பு 6 – உன்னை அறி
கதை
புல்லை உண்டு வாழும் புலி.

ஒரு நாள் ஆடு மேய்ப்பன் ஒருவன் தொலைவில் அரிய காட்சி ஒன்றைக் கண்டான். தாய்ப் புலி ஒன்று குட்டியை ஈன்றுவிட்டு இறந்து கிடந்தது. ஆடு மேய்ப்பன் சிறிய புலிக் குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து பாலூட்டி தமது ஆடுகளுடன் வளர்த்தான்.

சிறிய புலிக் குட்டி வளர்ந்து பெரிதானாலும் ஆடுகள் உண்ணும் புல்லையே உண்டது. அது ஆடுகளைப் போலவே கத்தவும் செய்தது; ஆடுகளைப் போலவே குதித்து விளையாடி உலாவி வந்தது.

ஒரு நாள் உயர்வான ஒன்று நிகழ்ந்தது. ஒரு பெரிய புலி, குட்டிப்புலி மற்றும் ஆடுகளினூடே செல்ல நேரிட்டது. அதற்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இளம் புலிக்குட்டி புல்லை உண்டு கத்திக் கொண்டிருந்ததைக் கண்டது.

அது ஆடுகளின் கூட்டத்தினுள் குதித்தது. அவை யாவும் அச்சத்தால் கத்திக் கொண்டே ஒடின; புலிக் குட்டியும் கத்திக் கொண்டே ஒடியது. பெரிய புலி குட்டிப் புலியைப் பிடித்து அருகில் இருந்த நீர் நிறைந்த குளத்திற்கு இட்டுச் சென்றது. “இதோ பார். நீ என்னைப் போன்ற ஒரு புலி. நீ எல்லா விலங்குகளின் ராஜா ஆவாய்!” என்றது. “கத்துதலையும் புல்லைத் தின்பதையும் நிறுத்து. புலியாயிருந்து கர்ஜனை செய்!”

அந்த இளம் புலிக் குட்டியும் தன் உண்மையான இயல்பை உணர்ந்து கொண்டது.

ஆலோசித்தல்
நமது உண்மையான இயல்பை எவ்வாறு அறிவது?

பிரார்த்தனை, அமைதியாக அமர்தல், நாமஸ்மரண் வாயிலாக தான் ஒரு ஆடு என்று எண்ணிய புலிக்குட்டியைப் போன்று நாம் இந்த உடல் மாத்திரம் என எண்ணுகிறோம்.