வகுப்பு 51 – ஸ்லோகம்
ஸ்லோகம்
ஓம் தத் ஸத் = நாராயண தூ புருஷோத்தம குரு தூ சித்த புத்த தூ ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ ப்ரஹ்ம மஸ்த தூ யஹ்வ சக்தி தூ யேசு பிதா ப்ரபு தூ ருத்ர விஷ்ணு தூ ராமக்ருஷ்ண தூ ரஹீம தாவோ தூ வாஸுதேவ கோ விஸ்வ ரூப தூ சிதானந்த ஹரி தூ அத்விதீய தூ அகால நிர்பய ஆத்ம லிங்க சிவ தூ
பொருள்:
நீரே நாராயணா,http://demo3.esales.in:8081/ மனித உருக் கொண்ட கடவுள்;
நீரே முழுமையின் திரு உருவம்; முழுமையான பரம் பொருள்;
நீரே பரிபூரண ஞானமடைந்த புத்தர்;
நீரே சுப்ரமண்யர்;கணேசர்; விக்னங்களைத் தீர்ப்பவர்;
நீரே சூரியனாகிய நெருப்பு;
நீரே படைத்தவரான ப்ரஹ்மா;மிகப் பெரியவர்;
நீரே ஜெஹோவா தெய்வீக அன்னை,உருவாக்கும் சக்தி
ஓ கடவுளே! நீரே தந்தை இயேசு.
நீரே ருத்திரர்: மாற்றுபவர்
நீரே விஷ்ணு : பாதுகாப்பவர்
நீரே ராமனும் கிருஷ்ணனும்;
நீரே ரஹீம் எல்லா கனிவான பண்புகளும்
எப்போதும் தருவதும் விரிவு படுத்தலும்
நீரே தாவோ;
நீரே வாசுதேவர் அனைத்துக்கும் ஆதாரம்; எல்லாம் உணர்ந்தவர் , எங்கும் நிறைந்தவர்.
நீரே ஹரி, மாயையை போக்குபவர், ஆனந்தமயமான ஆத்மா
நீரே இணையற்ற காலத்துக்கு அப்பால் அச்சமற்று துரதிர்ஷ்டத்திற்கு அப்பாற் பட்டவர்
நீரே லிங்கத்தை உருவாக்குபவரான சிவன், உருவமற்ற முழுமைப் பொருள் ஆவீர்.