வகுப்பு 48 – நேர்மை

வகுப்பு 48 – நேர்மை
கதை
நேர்மையே உயர்ந்த கொள்கை

காந்திஜி ஒரு போதும் பொய் உரைத்ததில்லை. ஒருமுறை பள்ளி ஆய்வாளர் அவருடைய வகுப்பிற்கு வந்து சில ஆங்கில சொற்களை பாராமல் எழுதச் சொன்னார். மூன்றாவது சொல் kettle என்பதாகும். காந்திஜியின் நண்பர்கள் சரியாக அந்த சொல்லை எழுதி விட்டார்கள். ஆனால் காந்திஜிக்கு அது தெரியவில்லை.

ஆய்வாளர் ஒவ்வொரு மாணவனின் தாளையும் சோதித்து அறிய சுற்றிவர ஆரம்பித்தார். ஆய்வாளர் ஒவ்வொரு மாணவராக நகர ஆரம்பிக்கையில் வகுப்பாசிரியர் காந்தி தவறாக எழுதியுள்ளதைக் கண்டு தனது காலால் அவரது காலைத் தீண்டி அவரது கவனத்தைத் தம் பக்கம் திருப்பி வேறு ஒரு மாணவர் சரியாக எழுதியுள்ளதைப் பார்த்து எழுதத் தம் கண்களால் அறிவுறுத்தினார். ஆனால் காந்திஜி யாரிடமிருந்தும் பார்த்து எழுத விரும்பவில்லை. ஆய்வாளர் காந்தியின் அருகே வரும்பொழுது அவர், “இங்கு ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. இந்தப் பையன் kettle என்பதைச் சரியாக எழுதவில்லை. அவன் ketle என எழுதியிருக்கிறான்” என்றார்.

ஆய்வாளர் இதனால் கோபம் கொள்ளவில்லை. மாறாக அவருக்குச் சரியான பதில் தெரியவில்லை என ஏமாற்றமடைந்தார். ஆனால் ஆசிரியர் காந்திஜி மீது கடுமையாகக் கோபம் கொண்டார். அவர் காந்தியிடம் “நான் உன் நண்பனின் தாளைப் பார்த்து எழுதச் சொன்னேன். ஆனால் நீ என்னைக் கவனிக்கவே இல்லை. நீ என் வகுப்பின் அவமானம்” என்றார்.

“காந்திஜி அதற்கு, “நான் ஒரு அவமானச் சின்னமாய் இருக்கலாம். ஆனால் பொய் சொல்ல இயலாது என்னால்” என்றார். காந்திஜி தான் ஒரு தவறைச் செய்து விட்டதற்காகவும் தன் ஆசிரியரை வருத்தம் கொள்ளச் செய்து விட்டதற்காகவும் மனம் வருந்தவே செய்தார். ஆனால் தாம் நேர்மையாக இருந்ததால் தனக்குத் தானே மகிழ்ச்சி கொண்டார்.

கதை – 2

அந்த வகுப்பிலேயே அனிதா மட்டுமே மிகச் சிறப்பாக சொற்களை எழுதுபவள் என அனைவரும் அறிவர். அவள் “rhythm” மற்றும் ” millennium” போன்ற கடினமான வார்த்தைகளைக் கூட மிக எளிதாக எழுதக் கூடியவள். வாரா வாரம் நடைபெறும் சொல் எழுத்துத் தேர்வில் முழு மதிப்பெண்களைப் பெற்று வந்தாள்.

அந்த வகுப்பின் ஆங்கில ஆசிரியை, எந்தக் குழந்தையாவது சொல் எழுத்துத் தேர்வில் குறைந்த அளவு 60% கூட மதிப்பெண்கள் பெறவில்லையெனில் அவர்கள் ஒவ்வொரு சொல்லையும் ஐம்பது முறை எழுதி அடுத்த தேர்வில் காண்பிக்க வேண்டும் என விதித்திருந்தார். ஸ்துதியின் அருகே அமரும் சுனிதா சொல் எழுத்துக்களை எழுதுவதில் தடுமாற்றம் கொண்டாள். சென்ற முறை அவள் 50% மதிப்பெண்களையே பெற்றிருந்தாள்; இதனால் ஒவ்வொரு சொல்லையும் ஐம்பது முறை எழுதி வரவேண்டியவளானாள்.

அனிதா தனது சொல்எழுத்துத் திறமையில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்ததால் அடுத்த தேர்வுக்குத் தான் தயார் செய்ய வேண்டியதில்லை என முடிவு செய்தாள்.

தேர்வு ஆரம்பித்தது. ஆசிரியை ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்துப் பின் மீண்டும் கூறினார். அவர் “handkerchief” எனும் சொல்லைக் கூறும் வரை அனைத்தும் நன்றாகவே முடிந்தது.

அனிதா h-a-n-d-k-e-r-c-h என்பதுவரை எழுதிவிட்டாள். பிறகு என்ன? i??…..அல்லது ….e?? அவள் மனதில் வேறு ஏதும் தோன்றவில்லை.

ஆசிரியை வேறு ஒரு சொல்லைக் கூற ஆரம்பித்தார். அனிதாவுக்கு சுனிதா சரியாக எழுதியிருப்பாளோ எனத் தோன்றியது. சுனிதா இந்த சொல்லை ஐம்பது முறை எழுதியிருக்கிறாள். அனிதாவுக்கும் சுனிதாவுக்கும் இடையே அகன்ற இடம் இருந்தது. அனிதாவின் கண்கள் வலது புறம் நோக்கி உருண்டன. அங்கு சீமாவின் கையெழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அவளது கண்கள் உடனே தன்னுடைய தாளின் பக்கம் சென்றன; அந்த சொல்லை “i-e-f” என எழுதி முடித்தாள்.

ஆசிரியை கடைசியான சொல் எழுத்தைக் கூறி முடித்த போது அனிதா மன இறுக்கமும் நடுக்கமும் கொண்டாள். அவளுடைய வாழ்க்கையில் முதன் முறையாக இப்போது ஏமாற்றியிருக்கிறாள். அவள், “ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக இருந்து கொண்டு இவ்வழியில் தான் எனது முழுமையான நற்பெயரை நிலைநாட்ட விரும்புகிறேனா?” என்று எண்ணினாள்.

பைத்தியம் பிடித்தாற்போல் அவள் முன்பு எழுதியிருந்ததை அழித்துவிட்டு தனக்குத் தெரிந்த தவறான சொல்லை எழுதினாள். அவள் ,”e-i-f ” என எழுதினாள். அவள் தன் வியர்வை கொண்ட கரத்தினின்று பென்சிலை எடுத்த பின் விடைத் தாளை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு பிறகு விடுதலை பெற்று பெருமூச்சு விட்டாள். “என் முழுமையான மதிப்பெண்கள் நீண்ட காலம் குறைபடாமல் இருப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது! என் நேர்மையாவது நிலைக்கட்டும்!” என்று எண்ணினாள்.

நீதி:

“நேர்மையே மிக உயர்ந்த கொள்கை” என்பது பெரியோர் வாக்கு. நேர்மையற்ற தன்மையை தவறான பாதை யென்று அறிந்து அதற்காக வருந்துங்கள்.