வகுப்பு 43 – நீங்கள் சிறப்பானவர்கள்

வகுப்பு 43 – நீங்கள் சிறப்பானவர்கள்
கதை
பென்சில் – ஒரு நீதிக் கதை

பென்சில் தயாரிப்பாளர் பெட்டியில் வைக்கும் முன்பாக பென்சிலை வெளியே எடுத்து “நான் உன்னை வெளி உலகிற்கு அனுப்பி வைப்பதற்கு முன்பாக நீ ஐந்து விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

“எப்பொழுதும் மறந்து விடாமல் நினைவில் கொண்டிரு; உன்னால் முடிந்த வரை நீ மிகவும் சிறப்பான பென்சில் ஆக வருவாய்”.

ஒன்று: “யாராவது ஒருவரின் கரத்தில் பிடி கொள்ள நீயாகவே அனுமதித்துக் கொண்டால் மட்டுமே நீ பற்பல சாதனைகளை ஆற்ற இயலும்”

இரண்டு: “நேரத்திற்கு நேரம் உன்னைக் கூர்மையாக்குவதன் மூலம் மிகுந்த வலியை அனுபவிப்பாய்! ஆனால் நீ மிகவும் நல்ல ஒரு பென்சில் ஆக அவை உனக்கு வேண்டும்”.

மூன்று: “நீ எந்த தவறுகளைச் செய்தாலும் அதைத் திருத்தம் செய்து கொள்ளும் இயல்பு கொண்டவன்”.

நான்கு: “உன்னுடைய மிக முக்கியமான அங்கம் எப்பொழுதும் உனக்குள் இருப்பதாகும்.”

ஐந்து:“நீ பயன்படுத்தப் படும் ஒவ்வொன்றின் மீதும் நீ உனது அடையாளத்தைப் பதிக்க வேண்டும். எந்த நிலை வந்தாலும் நீ எழுதும் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும்”.

பென்சிலும் இவற்றைப் புரிந்து கொண்டு நினைவில் கொள்வதாக உறுதியளித்துப் பின் இந்த நோக்கத்தை இதயத்துள் கொண்டு பெட்டியினுள் சென்று அடங்கியது.

இப்பொழுது பென்சிலின் இடத்தில் உங்களை வைத்து, நீங்கள் இப் பாடங்களை ஒருபோதும் மறக்காமல் நினைவில் இருத்திக் கொண்டால் உங்களால் முடிந்த அளவுக்கு மிக நல்ல மனிதராக இயலும்.

ஒன்று: “இறைவனின் கரத்தில் பிடி கொள்ள நீங்களாகவே அனுமதித்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் பற்பல சாதனைகளை ஆற்ற இயலும். நீங்கள் பல வரங்களைப் பெற்றுள்ளதால் மற்ற மனிதர்களையும் உங்களை அணுக அனுமதிப்பீராக!” .

இரண்டு:“வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதன் வாயிலாக நேரத்திற்கு நேரம் உங்களைக் கூர்மையாக்குவதன் மூலம் மிகுந்த வலியை அனுபவிப்பீர்! ஆனால் மிகுந்த சக்தியும் மிகவும் நல்ல மனிதன் எனும் நிலை பெறவும் அவை உங்களுக்குத் தேவைப் படும்”.

மூன்று: “நீங்கள் எந்த தவறுகளைச் செய்தாலும் அதைத் திருத்தம் செய்து கொள்ளும் இயல்புகொண்டவர்கள். ஆகவே தவறு செய்து விட்டதற்காக அச்சம் கொள்ளாதீர்கள்”.

நான்கு: “உங்களுடைய மிக முக்கியமான அங்கம் எப்பொழுதும் உங்களுக்குள் இருப்பதாகும். நீங்கள் எப்படி தோற்றம் அளிக்கிறீர்கள் என்பதை விட நீங்கள் எதை எண்ணுகிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பதே மிகவும் முக்கியமானதாகும்”

ஐந்து: “நீங்கள் பயணிக்கும் ஒவ்வொன்றின் மீதும் உங்களது அடையாளத்தைப் பதிக்க வேண்டும். எந்த சூழ்நிலை வந்தாலும் நீங்கள் உங்கள் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும்.