வகுப்பு 41 – நட்பு

வகுப்பு 41 – நட்பு
கதை
இரு நண்பர்கள்

இரண்டு நண்பர்கள் பாலைவனத்தின் வழியே நடந்து கொண்டிருந்தனர். இப்பயணத்தின் போது நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது; ஒருவன் மற்றவனை முகத்தில் அறைந்துவிட்டான்.

அறையப்பட்டவன் மிகவும் புண்பட்டான்; ஏதும் சொல்லவில்லை; ஆனால் மணலில் இவ்வாறு எழுதினான்:‘இன்று மிகவும் நல்லவனான என் நண்பன் என் முகத்தில் அறைந்து விட்டான்.’

அவர்கள் தொடர்ந்து பாலைவனச் சோலை ஒன்றைக் காணும் வரை நடந்து கொண்டே இருந்தனர்; அங்கே குளிக்கலாம் என முடிவு செய்தனர். அறையப்பட்ட நண்பன் சகதியில் மாட்டிக் கொண்டு மூழ்கத் தொடங்கினான்; ஆனால் நண்பன் அவனைக் காப்பாற்றினான். அவன் சகதியில் இருந்து முழுதும் வெளி வந்த பிறகு ஒருகல்லின் மீது எழுதினான்: ‘இன்று மிக நல்லவனான என் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்.’

மிக நல்லவனான தன் நண்பனை அறைந்து விட்டுப் பிறகு காப்பாற்றிய நண்பன், “நான் உன்னை அறைந்த பொழுது நீ மணலில் எழுதினாய்! இப்பொழுதோ கல் மீது எழுதுகிறாய், ஏன்?”

மற்ற நண்பன், “யாராவது நம்மைப் புண்படுத்தினால் நாம் அதை மணலில் எழுத வேண்டும்; மன்னித்தல் எனும் காற்றால் அதை அழித்து விட முடியும். http://demo3.esales.in:8081/ ஆனால் யாராவது நமக்கு நல்லதொன்றை செய்தால் நாம் அதை கல்லில் செதுக்கி வைத்தல் வேண்டும்; ஏனெனில் எந்தக் காற்றும் ஒருபோதும் அதை அழிக்க இயலாது”.

உங்கள் துன்பங்களை மணலில் எழுதவும் கிடைக்கும் பயன்களை கல்லில் பொறிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

சிறப்பான ஒரு மனிதனைக் காண சில நிமிடங்களும், அவனைப் பாராட்ட ஒரு மணி நேரமும், நேசிக்க ஒரு நாளும், அவனை மறக்கவோ எனில், வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் எனக் கூறுகின்றனர்.

நீதி:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றவைகளை மதிப்பீடு செய்யாதீர்.