வகுப்பு 4 – மானிடரும் இயற்கையும் – அன்றும் இன்றும்

வகுப்பு 4 – மானிடரும் இயற்கையும் – அன்றும் இன்றும்

ஆதி மனிதர்கள் தான் உண்டு உறங்கி உயிர் வாழ வேண்டி இயற்கையைப் பணிந்திருந்தனர். ஆகவே, பூமித்தாயை நேசித்து பூமாதா என்றும் பூமிக்கடவுள் என்றும் பூஜித்தனர். இயற்கையாகிய தீ, காற்று, மழை, சமுத்திரம், சூரியன் மற்றும் கோள்கள் அனைவரையும் வழிபட்டார்கள்.

ஆகவே, அவர்கள் இயற்கையுடன் நல்லிணக்கம் கொண்டு வாழ்க்கையின் எல்லா உருவத்தையும் மதித்து வாழ்ந்தனர்.

நாம் அனைவரும் கடவுள், மானிடர் மற்றும் இயற்கை யாவும் ஒன்றிணைய வேண்டி வாழ்ந்து வருகையில் மேற்கத்திய நாட்டினர், ஒவ்வொன்றும் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்றும் மனிதன் தமது தேவைகள் யாவும் வலுக்கட்டாயமாக இயற்கையினின்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் நம்பி வந்தார்கள். ஆகவே, நாகரிகம் எனும் பெயரில் காடுகளை அழித்தும் பள்ளத்தாக்குகளை மேடாக்கி நதிகளின் போக்கை மாற்றி வல்லரசு நாடுகளாக்க முற்பட்டனர்.

அ றிவியல் முன்னேற்றம் பெற்றது; இயற்கையை மனிதன் வெற்றி கொள்வதும் வளர்ச்சி அடைந்தது. நகரங்கள் எனப்படும் சிமிட்டிக் காடுகள் ஒவ்வோரிடத்திலும் உருவாயின. மானிடர் உண்மையில் உலகின் ஆளுனர்கள் தாமே என எண்ண ஆரம்பித்தனர்.

தாம் வல்லரசுகளை உருவாக்குகையில் இயற்கையை அழிப்பது மட்டுமல்லாமல், நமது கிரகத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையானதாக இருக்கும் மதிப்பு வாய்ந்த தூய காற்று, நன்னீர், மழை, காடுகள், உணவுப் பயிர்கள், ஓஸோன் அடுக்கு ஆகிய அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் மானிடர் யாவரும் தத்தம் சக்தியையும் உயர்வையும் காண்பிப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். திடீரென ஒரு நாள், உலகெங்கிலும் ஏதோ ஒன்று தவறாகப் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறது என்னும் உண்மையை மானிடர் உணர ஆரம்பித்தனர்.

கதை
சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு.

ஒரு நாள் ரோஹித்தின் தாயார் காய்கறி கடைக்குச் சென்று சிறிது உருளைக்கிழங்கும் தக்காளியும் வாங்கி வரச் சொன்னார். கடைக்குச் செல்லும் வழியில் ரோஹித் கிரிக்கெட் விளையாடச் சென்றுகொண்டிருக்கும் தனது நண்பர்களைச் சந்தித்தான். ரோஹித் கிரிக்கெட் விளையாடும் விருப்பம் கொண்டவன். எனவே தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடக் கிளம்பிச் சென்றான். அவன் காய்கறி வாங்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டான். ஒரு மணிநேரம் விளையாடிய பின் திடீர் என ஞாபகம் வரவே காய்கறி கடைக்கு விரைந்தான். காய்கறி கடைக்காரர் உருளைக் கிழங்கையும் தக்காளியையும் ப்ளாஸ்டிக் பையில் நிரப்பினார். ரோஹித் தமது ஆசிரியர் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டா எனக் கூறியிருப்பதை நினைவு கூர்ந்தான். அவர் வகுப்பில், பிளாஸ்டிக் பைகள் இயற்கைக்கும் பறவை விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பவை எனக் கூறியிருக்கிறார்.http://demo3.esales.in:8081/ அவன் கடைக்காரரிடம் சிறிது காத்திருக்கச் சொல்லிவிட்டு துணிப்பை ஒன்றை எடுத்து வர வீடு நோக்கிச் சென்றான். அவன் தன் தாயிடம் மன்னிப்பு கோரி துணிப்பை ஒன்றைத் தர வேண்டினான். மீண்டும் கடைக்கு விரைந்து சென்று உருளைக்கிழங்கையும் தக்காளியையும் வாங்கி வந்தான். பிறகு தன் தாயிடம் நடந்ததைக் கூறி விளக்கினான். தாய் தனது மகனை அணைத்துக் கொண்டு பெருமை கொண்டு பாராட்டினாள்.

ஸ்லோகம்

ஸமுத்ர வஸனே தேவி, பர்வத ஸ்தன மண்டலே,
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்,
பாத ஸ்பர்ஷ க்ஷ்ஷமாஸ்வ மே.