வகுப்பு 39 – கோபம்

வகுப்பு 39 – கோபம்
கதை
நாம் ஏன் கோபத்தால் சத்தமிடுகிறோம்?

ஹிந்து சன்னியாசி ஒருவர் குளிப்பதற்காக கங்கை நதியை அடைந்த போது கரைகளின் மீதிருந்த குடும்பத்தினர் சிலர் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு வசைபாடிச் சத்தமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பி புன்னகைத்தபடி வினவினார்: “மக்கள் ஏன் கோபத்தினால் சத்தமிடுவதும் ஒருவர் மற்றவர் மீது சத்தமிடுவதுமாக இருக்கிறார்கள்?

சீடர்கள் கண நேரம் சிந்தித்தார்கள். அவர்களில் ஒருவர், “நாம் நமது அமைதியை இழந்து விட்ட காரணத்தால் நாம் சத்தமிடுகிறோம்” என்றார். http://demo3.esales.in:8081/ ஆனாலும் மற்ற நபர் உங்கள் அருகிலேயே இருக்கையில் அவர் மீது ஏன் சத்தமிட வேண்டும்? நீங்கள் சொல்ல வேண்டியதை மென்மையாக அது போலவே சொல்ல முடியுமே!” என்றார் சன்னியாசி.

சீடர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு பதில்களை அளித்தார்கள்; ஆனாலும் மற்ற சீடர்கள் இதனால் மன நிறைவு கொள்ள இயலாதவராயினர்.

முடிவாக சன்னியாசியே பதில் அளித்து விளக்கினார்: இரண்டு நபர்கள் ஒருவர் மீது ஓருவர் கோபம் கொண்டிருக்கையில் அவர்தம் இதயங்கள் வெகு தூரம் விலகி இருக்கின்றன. அந்த தூரத்திற்கேற்ப ஒருவரை ஒருவர் கேட்கும் வகையில் அவர்கள் சத்தமாகப் பேசியாகவேண்டும்.

எந்த அளவுக்குக் கோபம் கொண்டு இருக்கிறார்களோ அதே அளவுக்கு அத்தகைய தூரத்தில் ஒருவரை ஒருவர் கேட்கும் வகையில் உரக்கப் பேசியாக வேண்டியுள்ளது.

இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் என்ன நேரும்? “ஒருவரை ஒருவர் சத்தமிட்டுப் பேசுவதில்லை; மாறாக அவர்களின் இதயம் மிக நெருக்கமாக இருப்பதால் மிருதுவாகப் பேசிக் கொள்வார்கள். அவர்களுக்கிடையில் உள்ள தூரமோ அறவே இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும்.”, சன்னியாசி, “அவர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகமாக நேசித்தால் என்ன நேரும்? அவர்கள் பேசுவதில்லை! மாறாக குசுகுசுத்துக் கொள்வர். அத்தகைய அன்பினால் மேலும் நெருங்கிவிடுவர்.

முடிவாக அவர்கள் குசுகுசுக்கக் கூடத் தேவையில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வர், அவ்வளவுதான். இரு நபர்கள் நேசித்துக் கொள்ளுகையில் இத்தகைய நெருக்கமாகி விடும்.

தனது சீடர்களைப் பார்த்துக் கூறினார்: “ஆகவே நீங்கள் விவாதிக்கையில் உங்கள் இதயங்கள் தூரமாக விலகிச் செல்ல அனுமதிக்காதீர்கள். உங்களிடையே தூரத்தை அதிகரிக்கச் செய்யும் வார்த்தை எதையும் விட்டு விடாதீர்கள்.