வகுப்பு 38 – சந்தேகம்

வகுப்பு 38 – சந்தேகம்
கதை
சந்தேகம் கொள்ளாதீர்

ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவன் பளிங்குக் கற்களைச் சேகரித்து வைத்திருந்தான். சிறுமி தன்னிடம் இனிப்புப் பண்டங்களை வைத்திருந்தாள்.

சிறுவன் சிறுமியிடம் அவள் தன் இனிப்புகளைத் தருவதாயின் பதிலுக்குத் தன் எல்லா பளிங்கு கற்களையும் தருவதாகக் கூறுகிறான். சிறுமியும் இதை ஏற்றுக் கொண்டாள். http://demo3.esales.in:8081/

சிறுவன் பெரியதாகவும் மிக அழகானதாகவும் இருந்த பளிங்குக் கல்லைத் தம்முடன் வைத்துக் கொண்டு மீதமுள்ளதைச் சிறுமியிடம் கொடுத்தான். சிறுமியோ தான் வாக்களித்தவாறே தன்னிடம் இருக்கும் எல்லா இனிப்புப் பண்டத்தையும் சிறுவனிடம் கொடுத்து விட்டாள்.

அன்று இரவு சிறுமி அமைதியாக உறங்கினாள்.