வகுப்பு 37 – தன்னம்பிக்கை

வகுப்பு 37 – தன்னம்பிக்கை
கதை

ஒருநாள் விவசாயி ஒருவரின் கழுதை கிணற்றில் விழுந்து விட்டது. விவசாயி என்ன செய்வதென்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கையில் கழுதையோ பரிதாபமாக முனகிக் கொண்டிருந்தது. இறுதியில் அவன் இந்த விலங்கோ மிகவும் வயதாகி விட்டது. எப்படியாயினும் இந்த கிணறும் மூடப்பட வேண்டியதாகும். எனவே, கழுதையைக் காப்பாற்றுதல் என்பது உபயோகமான செயல் அல்ல என எண்ணினான்.

அவன் தன் அருகாமையில் உள்ள எல்லோரையும் அழைத்து உதவி செய்யக் கோரினான். பக்கத்தில் உள்ள அனைவரும் வந்து ஷாவல் என்னும் உபகரணம் கொண்டு வந்து மண் கல் முதலான தேவையற்ற பொருள்களை அள்ளிக் கொண்டு வந்து கிணற்றுக்குள் போட உதவினார்கள். முதலில் கழுதை என்ன செய்கிறார்கள் என அறிந்து துக்கம் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தது. பிறகு மற்ற ஒவ்வொருவரும் ஆச்சரியம் கொள்ளும் வகையில் அமைதி யடைந்தது.

சில ஷாவல்களில் மண்ணை அள்ளிப் போட்ட பிறகு விவசாயி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். தான் கண்டதை எண்ணி வியப்பு கொள்ளும் வகையில் கண்ணுற்றான். தன் மீது விழும் ஒவ்வொரு ஷாவல் மண்ணையும் கழுதை உடம்பை உலுக்கி உலுக்கி தன் மீது விழும் மண்ணை கிணற்றுக்குள் தள்ளி விட்டு மேலே எழ ஆரம்பித்தது.

விவசாயியும் மற்றவர்களும் தொடர்ந்து மண்வாரி நிறைய அள்ளி அதன் மீது போடப்போட அந்த விலங்கு தன் உடலை உலுக்கி உலுக்கித் தள்ளிவிட்டு அதன் மீதே ஏறி நின்றது. சீக்கிரத்திலேயே ஒவ்வொருவரும் ஆச்சரியம் கொள்ளும் வகையில் கிணற்றின் விளிம்பு வரை வந்து விட்டது. முடிவில் சந்தோஷமாக குதிரையைப் போல துள்ளிக் குதித்து வெளி வந்தது.

நீதி

வாழ்க்கையில் உங்கள் மீது மண்வாரி விடப்படும். எல்லாவிதமான மண்ணும் வாரி விடப்படுவீர்கள். கிணற்றில் இருந்து வெளியே வரும் யுக்தி என்னவெனில் தன் மீது வாரிவிடப்படும் எல்லா மண்ணையும் உதறி உதறித் தள்ளிவிட்டு அதன் மீதே ஏறி வெளி வர வேண்டும் என்பதே. நமது ஒவ்வொரு கஷ்டமும் படிக்கட்டுக்களே . மிக ஆழமான கிணறுகளாயினும் அங்கேயே நின்று விடாமல் ஒருபோதும் விட்டுவிடாமல் வெளியே வர இயலும்.