வகுப்பு 35 – முன்னுரிமைகள்

வகுப்பு 35 – முன்னுரிமைகள்
கதை
வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள்.

தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன் முன்பு சில பொருட்களை வைத்துக் கொண்டு வகுப்பின் முன் நின்றார். வகுப்பு ஆரம்பித்த பொழுது எவ்வித வார்த்தையையும் கூறாமல் பெரிய ஒரு குளிர்பதன ஜாடியை எடுத்தார். அதில் இரண்டு அங்குல விட்டமுள்ள கற்களைப் போட்டார். இப்போது மாணவர்களைக் கேட்டார்:

“ஜாடி நிரம்பி இருக்கிறதா?” என்று.

மாணவர்கள் நிரம்பி இருக்கிறது என்றார்கள். பிறகு பெட்டி நிறைய கூழாங்கற்களை எடுத்து ஜாடியில் போட்டு லேசாகக் குலுக்கினார். இயல்பாகவே கூழாங் கற்கள் உருண்டு சென்று கற்களுக்கு இடையில் சென்றடைந்தன. மாணவர்களிடம் மீண்டும் கேட்டார்:

ஜாடி நிரம்பி இருக்கிறதா?” என்று.

மாணவர்கள் நிரம்பி இருக்கிறது என்றார்கள்.

இப்போது பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடிக்குள் நிரப்பினார். மணல் ஜாடியில் காலியாக இருந்த எல்லா பகுதிகளிலும் சென்றடைந்தது. பேராசிரியர் மீண்டும் ஒருமுறை மாணவர்களைக் கேட்டார்:ஜாடி நிரம்பி இருக்கிறதா?” என்று. மாணவர்கள் எல்லாரும் ஒரே குரலில் “ஆம்” நிரம்பி இருக்கிறது என பதில் கூறினார்கள்.

“இப்பொழுது இந்த ஜாடி என்பது உங்கள் வாழ்க்கைக்கு உதாரணமாக உள்ளது என்பதை உணர வேண்டுகிறேன். கற்கள் யாவும் மிக முக்கியமான விஷயங்கள்; உங்கள் குடும்பம் – மனைவி – குழந்தைகள் – ஒவ்வொரு விஷயமாக இருக்கும் அனைத்தும் இழக்கப் பட்டு அவை மட்டும் நீடித்தாலும் உங்கள் வாழ்க்கை இன்னும் முழுதாகவே நிரம்பியே இருக்கும்.

கூழாங்கற்கள் பொருட்டாகக் கூடிய மற்ற விஷயங்கள் – உங்கள் வேலை – வீடு – வாகனம் இது போன்றவை.

மணல் என்பது மற்று முள்ள ஒவ்வொன்றும் ஆகும்.

நீங்கள் ஜாடியில் மணலை முதலில் நிரப்பினால் கூழாங்கற்களுக்கோ அல்லது கற்களுக்கோ அங்கே இடமில்லாது போய்விடும். உங்கள் வாழ்க்கையும் கூட அது போலவேதான் அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் நேரத்தையும் சக்தியையும் சின்னஞ் சிறு விஷயங்களிலேயே செலவு செய்துவிட்டால் உங்களுக்கு முக்கியமாக உள்ள விஷயங்களுக்கு ஒரு போதும் இடமளிக்க இயலாது.

உங்கள் மகிழ்ச்சிக்கு நெருக்கம் தரக் கூடிய விஷயங்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்கள் மனைவியை வெளியே நடனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். பணி செய்யப் போவதற்கு வேண்டிய நேரம் எப்போதும் கிடைக்கும்; இல்லத்தைச் சுத்தம் செய்யுங்கள் – மாலை விருந்தளியுங்கள் – இதை முடிப்பதற்கான நிகழ்வை நிர்ணயுங்கள்.

முதலில் கற்கள் மீது கவனம் செலுத்துங்கள் – அவையே உண்மையிலேயே பொருட்டானதாகும். உங்கள் முன்னுரிமைகளை நிலையாக்குங்கள்.