வகுப்பு 34 – பலவீனமா அல்லது வலிமையா

வகுப்பு 34 – பலவீனமா அல்லது வலிமையா
கதை
பலவீனமா வலிமையா

சில நேரங்களில் நமது மிகப் பெரும் பலவீனமே நமது மிகப் பெரும் வலிமையாக மாறக் கூடும். உதாரணத்திற்கு பயங்கரமான கார் விபத்து ஒன்றில் தனது இடது கரத்தை இழந்து விட்டோம் என்பது உண்மையாயினும் ஜூடோ கற்றுக் கொள்ள முடிவு செய்த பத்து வயது சிறுவனின் கதையை எடுத்துக் கொள்வோம்.

அவன் வயதான ஜப்பானிய ஜூடோ மாஸ்டர் ஒருவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். சிறுவன் நன்றாகப் பயின்று வந்தான்; ஆகவே மூன்று மாத பயிற்சிக்குப் பிறகும் கூட மாஸ்டர் ஏன் ஒரே ஒரு அசைவை மட்டும் பயிற்சியளித்து வருகிறார் என்பதை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.

“ஸென்ஸேய்” சிறுவன் முடிவாகக் கேட்டான். ” நான் மேலும் பல அசைவுகளைக் கற்றுக் கொள்ளக் கூடாதா?” என்று.

“இதுவே நீ அறிகிற ஒரே ஒரு அசைவாகும். ஆனால் நீ எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டிய அசைவாகும்” என ஸென்ஸேய் கூறினார்.

முழுமையாக புரிந்து கொள்ள இயலாமல், ஆனால் தனது ஆசான் மீது நம்பிக்கை கொண்டு பயிற்சியைத் தொடர்ந்தான்.

பல மாதங்கள் கழித்து ஆசான் சிறுவனை முதல் தொடர் விளையாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார். தனக்குள் ஆச்சரியம் கொண்டு சிறுவன் முதல் இரண்டு போட்டிகளில் எளிதில் வென்று விட்டான். மூன்றாவது போட்டி மிகவும் கடினம் என அறியப் பட்டுள்ளதால், சிறிது நேரத்தில் அவனது எதிராளி பொறுமையை இழந்து மேலும் சக்தியை வரவழைத்துக் கொண்டு தயாரானான்;

சிறுவனோ இந்த போட்டியை வெல்ல மிகத் திறமையாக தன் ஒற்றை அசைவைப் பயன் படுத்தினான். முந்தைய போட்டிகளில் வென்றதனால் வியப்பு மிகக் கொண்டு இந்த சிறுவன் முடிவில் போட்டியிடுகிறான்.

இம்முறை அவனது எதிராளி பெரியவனாக, சக்தி மிக்கவனாக அனுபவம் மிக்கவனாக இருந்தான். கண நேரத்தில் சிறுவன் வலிமையில் விஞ்சியதாகக் காணப்பட்டான். சிறுவன் மனம் துன்புறுமே என எண்ணிய நடுவர் சிறிது நேரம் ஓய்வை அறிவிக்க வந்தார். ஸென்ஸேய் குறுக்கிட்டால் போட்டியை நிறுத்தவும் தயாராக இருந்தார்.

“இல்லை! அவன் தொடர்ந்து போட்டியிடட்டும்!” என்று ஸென்ஸேய் வற்புறுத்தினார்.போட்டி மீண்டும் ஆரம்பித்த உடனேயே எதிராளி நெருக்கடியான தவறைச் செய்தான்; தன்னுடைய கவசப் பட்டையைத் தவற விட்டான். சிறுவன் தன் அசைவைப் பயன்படுத்தி இமைப்பொழுதில் அவன் மீது குத்து விட்டான். இவ்வாறு சிறுவன் போட்டியையும் தொடர்போட்டியையும் வென்றுவிட்டான். அவன் வீரன் ஆனான்.

வீடு திரும்புகையில் சிறுவனும் ஸென்ஸேயும் ஒவ்வொரு போட்டியிலும் இருந்த அசைவுகளை நினைவுக்குக் கொண்டு வந்தனர். பிறகு சிறுவன் தன் மனதில் உண்மையாக இருப்பது என்ன என்று கேட்கும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.

“ஸென்ஸேய்! இந்த தொடர் போட்டியை ஒரே ஒரு அசைவைக் கொண்டு எவ்வாறு வெல்ல முடிந்தது?”

” நீ இரண்டு காரணங்களால் வென்றாய்!” ஸென்ஸேய் பதில் கூறினார். ” முதலில் ஜூடோவில் மிகவும் கடினமான எல்லா பயிற்சிகளிலும் ஒன்றைக் கற்றுத் தேர்ந்துவிட்டாய். இரண்டாவதாக அத்தகைய அசைவில் தன்னைக் காத்துக் கொள்ள உன் எதிராளிக்குத் தெரிந்ததெல்லாம் உனது இடது கரத்தை வலுவாகப் பிடிப்பதுதான்”.

சிறுவனின் மிகப் பெரிய பலவீனம் அவனது மிகப் பெரிய வலிமையானது. சில நேரங்களில் நமது மிகப் பெரும் பலவீனமே நமது மிகப் பெரும் வலிமையாக மாறக் கூடும். ஊக்கமடையுங்கள். மற்றவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.

அன்பான அனைவருக்கும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.