வகுப்பு – 33 – தியாகம்

வகுப்பு – 33 – தியாகம்
கதை

இளைஞன் ஒருவன் பெரிய ஒரு கம்பெனியில் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கச் சென்றான்.

அவன் ஆரம்ப நிலையில் உள்ள நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுப் பின் கம்பெனியின் இயக்குநரிடம் முடிவான தேர்வுக்குக்காக சந்திக்கச் சென்றான்.

அவனது கல்வித்தகுதியானது மிகவும் நன்றாக உள்ளது என்பதை சான்றுகள் வாயிலாகத் தெரிந்து கொண்டார்.

“நீங்கள் பள்ளியில் உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தீர்களா?” என்றார்

இளைஞன்”இல்லை” எனப் பதிலுரைத்தான்.

“பள்ளிக் கட்டணங்களை யார் செலுத்தினார்கள்?”

“பெற்றோர்”

“அவர்கள் எங்கு பணி புரிந்தார்கள்?”

“அவர்கள் துணி வெளுப்பவராகப் பணி புரிந்தார்கள்”

“உங்கள் கரங்களைக் காண்பியுங்கள்”

இளைஞன் தன் மிருதுவான நன்றாக இருக்கும் கரங்களைக் காண்பித்தான்.

“நீங்கள் எப்போதாவது உங்கள் பெற்றோருக்குத் துணி வெளுக்க உதவியிருக்கிறீர்களா?”

“ஒருபோதுமில்லை! என் பெற்றோர்கள் நான் எப்போதும் கல்வி கற்கவும் மேன்மேலும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள்!”

அதுமட்டுமல்லாமல் அவர்கள் என்னை விட வேகமாகத் துணி வெளுப்பார்கள்.”

இயக்குநர் “நான் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இன்று வீட்டுக்குப் போகையில் உங்கள் பெற்றோரின் கரங்களைத் தூய்மைப் படுத்துங்கள். பிறகு நாளை காலை என்னை வந்து பாருங்கள்!”

இளைஞன் உற்சாகமிழந்தான்.

அவன் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற போது அவன் தம் பெற்றோரின் கரங்களைத் தாம் தூய்மை செய்ய வேண்டி அழைத்தான்.

இதை அவனது பெற்றோர்கள் புதியதாக உணர்ந்து மகிழ்ந்தார்கள். ஆனாலும் பல வித உணர்வுகள் கலந்த நிலையில் தம் கரங்களைப் பிள்ளையிடம் காண்பித்தார்கள்.

இளைஞன் மெதுவாக அவர்களின் கரங்களைக் கழுவினான்.

இவ்வாறு செய்கையில் கண்ணீர் உகுத்தான்.

அவன் தம் பெற்றோரின் கரங்கள் சுருக்கமுற்று பல இடங்களில் காயங்களுடனும் இருப்பதை அப்போதுதான் முதன் முறையாகக் கண்ணுற்றான்.

சில காயங்கள் வலி மிகுந்ததாகவும் அவன் தொடும் போது கரடுமுரடாகவும் இருந்தன.

இளைஞன் தன் பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த ஏதுவாக ஒவ்வொரு நாளும் இந்த இரண்டு ஜதைக் கரங்கள்தான் துணிகளை வெளுத்து வந்தன என்பதைத் தம் வாழ்நாளில் முதன் முறையாக உணர்ந்தான். அவர்தம் கரங்களில் உள்ள காயங்களே, அவனது கல்வி, பள்ளிக்கூட செயல்பாடுகள், அவனது எதிர்காலம் ஆகியவற்றிற்கு அவர்கள் தர வேண்டியிருந்த விலை.

தம் பெற்றோரின் கரங்களைக் கழுவிய பிறகு இளைஞன் அமைதியாக மீதமிருந்த துணிகள் அனைத்தையும் அவர்களுக்காக வெளுத்துக் கொடுத்தான்.

அந்த இரவு பெற்றோர்களும் இளைஞனும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலை இளைஞன் இயக்குநரின் அலுவலகம் சென்றான். இயக்குநர் அவன் கண்களில் பெருகிய கண்ணீரைக் கண்டு, ” நேற்று நீங்கள் வீட்டுக்குச் சென்று என்ன செய்தீர்கள், என்ன கற்றுக் கொண்டீர்கள் எனக் கூற முடியுமா?” என்றார்.

” என் பெற்றோரின் கரங்களைக் கழுவினேன், மீதமிருந்த துணிகளையும் வெளுத்துத் தந்தேன்” என இளைஞன் பதில் உரைத்தான். ” இப்பொழுது நான் உயர்வளித்தல் என்றால் என்ன என்பதை உணர்கிறேன். எனது பெற்றோர்கள் இல்லையெனில் இன்று நான் இந்த அளவுக்கு உருவாகியிருக்க மாட்டேன்” என்றான்.

என் பெற்றோருக்கு உதவியதன் மூலம் நாம் சுயமாக ஒன்றைச் செயலாற்றுதல் என்பது எவ்வளவு கடினமானது மற்றும் உறுதியானது என்பதை இன்றுதான் உணர்கிறேன்; ஒருவர் தம் குடும்பத்திற்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் மற்றும் மதிப்பிற்கு நான் உயர்வளிக்க வந்துள்ளேன்” என்றான்

இயக்குநர் கூறினார், “ஒரு மேலாளரிடம் இதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன். மற்றவருக்கு உதவி செய்வதைப் போற்றி, பணிகளை நிறைவேற்றுவதற்கு மற்றவரின் கஷ்டங்களை உணர்ந்து, தம் வாழ்வில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிராத நபர் ஒருவரையே இந்த வேலைக்குத் தேர்வு செய்ய விரும்புகிறேன்.