வகுப்பு 31 – மகிழ்ச்சி

வகுப்பு 31 – மகிழ்ச்சி
கதை
மகிழ்ச்சியின் ரகசியம்

கடை ஒன்றின் உரிமையாளர் தன் மகனிடம் இந்த உலகிலேயே உள்ள மிகவும் கூர்மையான அறிவு கொண்ட ஞானி ஒருவரைக் கண்டு மகிழ்ச்சியின் ரகசியம் என்னவென்று அறிந்து வரச் சொன்னார். அந்த இளைஞன் நாற்பது தினங்களாக பாலைவனத்தில் பயணித்து முடிவில் மலை மீது இருந்த அழகிய கோட்டை ஒன்றிற்கு வந்து சேர்ந்தான். அங்குதான் அந்த ஞானி வாழ்ந்து வந்தார்.

ஞானியாகிய அந்த மனிதரைக் காண்பதையும் விட மேலானதாக நமது நாயகனான இந்த இளைஞன்அரண்மனையின் முக்கியமான அறைக்குள் நுழைந்தவுடன் தேனீக்கள் தேன்கூட்டில் பணிபுரிவது போன்றதான செயல்பாடுகளைக் கண்ணுற்றான். வியாபாரிகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். மூலைகளின் ஓரமாக மக்கள் கூடிப் பேசிய வண்ணமிருந்தனர். இன்னிசைக் கச்சேரியினர் மென்மையாக இசையை இசைத்துக் கொண்டிருந்தனர். மேசையில் தங்கத் தாம்பாளங்களில் உலகில் ஆங்காங்கே மட்டும் கிடைக்கும் உயர்ந்த வகை உணவுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. ஞானி ஒவ்வொருவருடனும் உரையாடினார்; இந்த இளைஞன் தன் முறையை அந்த மனிதரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இளைஞன் அங்கு எதற்காக வந்திருக்கிறான் என்பதை அவன் விளக்கி முடியும் வரை ஈடுபாட்டுடன் கவனமாகக் கேட்டார்; பின் “மகிழ்ச்சிக்கான ரகசியத்தை அப்போதே கூற போதிய நேரமில்லை. நீ இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டு இந்த மாளிகை முழுக்க சுற்றிப்பார்த்து விட்டு வா. அதோடு இந்தத் தேக்கரண்டியில் இரண்டு துளி எண்ணெய் தருகிறேன். நீ சுற்றி வரும் வேளையில் தேக்கரண்டியில் எண்ணெய்யையும் ஏந்திக் கொண்டு எண்ணெய் கீழே சிந்திவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இளைஞன் கரண்டியை ஏந்திக்கொண்டு அதன் மீதே பார்வையை நிலைநிறுத்தியவாறு அந்த மாளிகையின் பல பகுதிகளில் இருந்த படிக்கட்டுக்களில் ஏறி இறங்கினான். இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிருக்கும் அறைக்குத் திரும்பி வந்தான்.

“நல்லது! என்னுடைய உணவுக் கூடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பெர்ஸிய நாட்டு திரைச் சீலைகளைப் பார்த்தீரா? பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து தலைமைத் தோட்டக்காரர் அமைத்துக் கொடுத்த தோட்டத்தின் அழகைப் பார்த்தீரா? எனது நூலகத்தில் இருக்கும் அழகிய தோல் காகிதங்களைக் கவனித்தீரா?” என்று கேட்டார்.

இளைஞன் தர்ம சங்கடமான நிலையை அடைந்து தான் எதையும் காணவில்லை என்பதைக் கூறினான். அவனது கவனம் முழுவதும் ஞானி ஒப்படைத்த கரண்டியில் இருந்து எண்ணெய் சிந்தாமல் பார்த்துக் கொள்வதிலேயே இருந்தது.

“பிறகென்ன! மீண்டும் செல்! எனது உலகின் அற்புதங்களை கண்டு வா! ஒரு மனிதனின் இல்லத்தைப் பற்றி அறியாவிடில் அவன் மீது யாரும் நம்பிக்கை கொள்ள இயலாது!” என்று கூறி மீண்டும் அனுப்பி வைக்கிறார்.

விடுவிக்கப் பட்டதைப் போல எண்ணி அந்த இளைஞன் கரண்டியை ஏந்திக் கொண்டு மாளிகையைச் சுற்றிலும் அறியப் புறப்பட்டான்; இம்முறை உச்சிப் பகுதி மற்றும் சுவர்களில் கையாளப்பட்டுள்ள நுணுக்கமான கலையைக் கண்டான். தோட்டங்களை, தன்னைச் சுற்றியுள்ள எல்லா மலைகளை, மலர்களின் அழகை, ஒவ்வொன்றும் தேர்வு செய்யப் பட்டிருக்கும் நயம் ஆகிய அனைத்தையும் கண்டான். ஞானியிடம் திரும்பி வந்து தான் கண்டிருந்த ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகக் கூறினான்.

“ஆனால் நான் உன்னிடம் ஒப்படைத்த எண்ணெய் என்னவாயிற்று?” என்றார் ஞானி. தான் வைத்துக் கொண்டிருந்த கரண்டியை நோக்கிய இளைஞன் அதில் இருந்த எண்ணெய் சிந்தி விட்டதை அறிந்தான்.

“நல்லது! ஒரே ஒரு அறிவுரையை மட்டுமே உனக்கு நான் அளிக்க இயலும்” என்றார் ஞானிகளில் சிறந்த ஞானி. “கரண்டியில் உள்ள எண்ணெய்யை ஒருபோதும் மறந்து விடாமல் உலகின் அனைத்து அற்புதங்களையும் காண்பதே மகிழ்ச்சியின் ரகசியம்!”

மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஐந்து எளிய விதிகளை நினைவு கொள்ளுங்கள்:
  • உங்கள் இதயத்தை வெறுப்பினின்று விடுவியுங்கள். மன்னிப்பு.
  • கவலைகளினின்று உங்கள் மனதை விடுவியுங்கள். ஒருபோதும் நடந்திராத பெரும்பான்மையானவை.
  • எளிமையாக வாழுங்கள்.