வகுப்பு 3 – படைப்பில் கடவுள்

வகுப்பு 3 – படைப்பில் கடவுள்
கதை
உண்மையான ஒரு ஆன்மீகப் பயணி- புனிதர் ஏகநாதர் கழுதைக்கு அளித்த பேறு

முன்னொரு காலத்தில் புனிதர்களின் குழு ஒன்று வடக்கு பாரதத்தில் பிரயாகையில் ஓடும் புனித கங்கையின் நீரை எடுத்துக் கொண்டு தென்கோடியில் இராமேஸ்வரத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு சமர்ப்பிக்க வேண்டி புனித யாத்திரை(ஆன்மீகப் பயணம்) மேற்கொண்டனர். அது ஒரு நீண்ட நெடுந்தூர கடினமான பயணம். அவர்களுடன் புனிதர் ஏகநாத் இருந்தார். அவர்கள் பரந்த ஒரு பாலைவனத்தைக் கடந்து கொண்டிருக்கையில் தாகத்தினால் நா வறண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கழுதை ஒன்றைக் கண்டனர். புனிதர் ஏகநாத் உடனே தம்மிடம் இருக்கும் கங்கை நீரைக் கழுதைக்கு அளித்துக் காப்பாற்றினார். இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய சுமந்து வந்த நீரை கழுதைக்களித்து வீணாக்கியதால் உடனிருந்த யாவரும் அவரது செயலை ஏற்றுக் கொள்ளாமல் இது இறைவன் சிவபிரானையே அவமதித்ததாகுமென வாதிட்டனர். புனிதர் ஏகநாதர் அமைதியுடன், “ஓ ஞானியரே! கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என நீங்கள் மேலும் மேலும் புனித நூல்கள் பலவற்றில் படித்திருக்கிறீர்கள். இவ்வாறு இருக்கையில் ஏன் நிலை தடுமாறுகிறீர்கள்? சரியான சமயத்தில் பயன் படாத எதுவும் பயனற்றே போகும்.