வகுப்பு 28 – நோக்கங்கள்

வகுப்பு 28 – நோக்கங்கள்
கதை
அர்த்தமற்ற நோக்கங்கள்

விவசாயி ஒருவர் தன்னுடன் நாய் ஒன்றை வைத்திருந்தார். அந்த நாய் சாலையோரம் அமர்ந்து கொண்டு அந்த பக்கம் வருகின்ற வாகனங்களுக்காக காத்திருப்பது வழக்கம். ஏதாவது வாகனம் வருமாயின் அது சாலையோரமாக இருந்தவாறே குரைத்துக் கொண்டும் வாகனத்தை முந்திச் செல்ல முயன்று கொண்டும் இருக்கும். ஒருநாள் பக்கத்து நிலத்துக்காரர் “உங்கள் நாய் வாகனத்தை எப்போதாவது பிடிக்கப் போகிறது என்று எண்ணுகிறீர்களா” என்று கேட்டார். விவசாயி, “அதைக் குறித்து நான் கவலைப்படவில்லை. ஒருபோதாவது ஒருவரைப் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகிறதோ என்றுதான் கவலைப் படுகிறேன்” என்றார்.

கதையின் நீதி

“மனிதர்கள் பலர் அர்த்தமில்லாத நோக்கங்களைப் பின் தொடர்ந்துகொண்டு இந்த நாயைப் போலவே நடந்து கொள்கிறார்கள்”.

நோக்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்பது முக்கிய விஷயமல்ல. அதை அடைவதற்கு நீங்கள் எவ்வாறு முடிவு செய்து செல்கிறீர்கள் என்பதே முக்கியமானது.