வகுப்பு 27 – வாழ்க்கையின் துயரங்கள்

வகுப்பு 27 – வாழ்க்கையின் துயரங்கள்
கதை
காபி

முன்னொரு முறை மகள் ஒருத்தி தன் தந்தையிடம் தன் வாழ்க்கை முழுவதும் துர்ப்பாக்கியமாகி விட்டதாகவும் எப்படி இதை சரிக்குக் கொண்டு வருவதென்றே தனக்குத் தெரியவில்லை என்றும் புலம்பினாள். அவள் எல்லா நேரமும் போராடுவதிலும் கடினப் பிரயத்தனம் செய்வதிலுமே சோர்வடைந்து விட்டாள். ஒரு பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டபோது உடனேயே இன்னொரு பிரச்னை பின் தொடர்வது போன்றே காணப்பட்டது.

அவளது தந்தை தலைமை ஆண் சமையற்காரராக இருந்ததால் அவளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பானைகளில் நீர் நிரப்பி சுவாலை அதிகமான தீயில் வைத்தார். பானையில் உள்ள நீர் கொதிக்க ஆரம்பித்த உடனே ஒரு பானையில் உருளைக் கிழங்குகளையும், இரண்டாவது பானையில் முட்டைகளையும் மூன்றாவது பானையில் அரைக்கப் பட்ட காபிக் கொட்டைகளையும் இட்டார். எவ்வித வார்த்தைகளையும் தன் மகளிடம் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொதிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மகள் தந்தை செய்து கொண்டிருப்பதை எண்ணி வியந்த வண்ணம் முனகிக் கொண்டே பொறுமையின்றி காத்திருந்தாள். இருபது நிமிடம் கழிந்த பிறகு அடுப்பை அணைத்தார். உருளைக் கிழங்குகளை பானையில் இருந்து எடுத்து ஒரு கோப்பையில் இட்டார். முட்டைகளை பானையில் இருந்து எடுத்து கோப்பையில் வைத்தார். பின் மூன்றாவது பானையில் இருந்து காபியைக் கரண்டியில் எடுத்து காபித் தம்ளரில் ஊற்றினார்.

தன் மகளிடம் திரும்பி, “மகளே! நீ என்ன காண்கிறாய்?” என்றார். “உருளைக்கிழங்கு, முட்டைகள், காபி” என்று சுரத்தில்லாமல் பதில் கூறினாள்.

“கவனமாகப்பார். உருளைக்கிழங்கைத் தொட்டுப் பார்த்துச் சொல்” என்றார்.மகள் அவ்வாறே பார்த்துப் பின் மிருதுவாக உள்ளதென்றாள்.

அவர் இப்போது முட்டையை எடுத்து உடைத்துப் பார்க்கச் சொன்னார். முட்டையின் ஓட்டை உடைத்து எடுத்து பார்க்கையில் முட்டை வெந்து இறுகிப் போய் உள்ளதைக் கண்டாள்.

இறுதியில் காபியை உறிஞ்சிக் குடித்துப் பார்க்கச் சொன்னார். அதனுடைய நறுமணம் கமழ முகத்தில் புன்முறுவல் கொண்டாள்.

“தந்தையே! இதன் பொருள் என்ன?” என்றாள். தந்தை, “உருளைக் கிழங்கு, முட்டைகள் மற்றும் காபி மூன்றுமே நீரில் கொதித்தல் எனும் ஒரே விதமான துன்பத்தையே சந்தித்தன. இருப்பினும் ஒவ்வொன்றும் வேறு வேறாக வினை புரிந்தன. உருளைக்கிழங்கு உறுதி, கடினம் மற்றும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருந்தாலும் கொதிக்கும் நீரில் இட்டவுடன் மிருதுவாகவும் நைந்தும் போனது.

முட்டையோ உடைந்தால் சிதறிவிடும் தன்மை கொண்டது; வெளியே உள்ள மெல்லிய ஒடு உள்ளிருக்கும் திரவப் பகுதியை கொதி நீரில் இடப்படும் வரை பாதுகாத்தது. பிறகு உள்ளே இருக்கும் திரவம் கடினமாயிற்று.

எப்படி இருந்தாலும் அரைக்கப்பட்ட காபிக் கொட்டை மட்டும் மாறாததாகவே இருந்தது. கொதி நீரில் அதைப் போட்டபிறகு அது நீரையே புதிய ஒன்றாக மாறச் செய்துவிட்டது.

“இதில் நீ எதுவாக இருக்கிறாய்?” என மகளிடம் வினவினார். துன்பநிலை உங்கள் கதவைத் தட்டுகையில் எவ்வாறு பதில் அளிப்பீர்கள்? உருளைக் கிழங்காகவா, ஒரு முட்டையாகவா அல்லது காபிக் கொட்டை போன்றா? எதுவாக இருப்பீர்?

வாழ்க்கையில் நம்மைச் சுற்றிலும் பல விஷயம் நடைபெறும்.