வகுப்பு 26 – தேகத்தின் முக்கியமான அங்கம்

வகுப்பு 26 – தேகத்தின் முக்கியமான அங்கம்
கதை
தேகத்தின் மிக முக்கியமான அங்கம் எது?

என் அம்மா என்னிடம் கேட்பார் ;

“தேகத்தின் மிக முக்கியமான அங்கம் எது?”

பல ஆண்டுகளாக நான் யூகித்ததுதான் சரியான பதில் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

நான் என் இளமைக் காலத்தில் மானிடருக்கு ஒலிதான் மிக இன்றியமையாதது. ஆகவே “என் காதுகள் அம்மா!” என்றேன்.

“இல்லை! மனிதர் பலர் காது கேளாதவராக இருக்கிறார்கள். ஆனால் நீ அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய். சீக்கிரத்திலேயே நான் மீண்டும் கேட்பேன்” என்றார்.

அவர் என்னைக் கேட்பதற்கு முன் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

என்னுடைய முதல் முயற்சியில் இருந்தே நான் சரியான பதிலைச் சிந்தித்து இருந்தேன்.

இம்முறை கூறினேன்: “அம்மா! ஒவ்வொருவருக்கும் பார்வை இன்றியமையாதது. ஆகவே அது நமது கண்களாகத்தான் இருக்க வேண்டும்”

அம்மா என்னை ஒருமுறை பார்த்து விட்டுக் கூறினார்.

“நீ வேகமாகக் கற்றுக் கொண்டு வருகிறாய். ஆனால் பதில் சரியானதல்ல! ஏனெனில் மனிதர்களில் பலர் கண் பார்வையற்றவராக இருக்கிறார்கள்.”

மீண்டும் வீழ்த்தப்பட்ட நிலையில் நான் ஆண்டுக்கணக்காக அறிவுத் தேடுதலைத் தொடர்ந்தேன். தாய் மீண்டும் இரண்டு முறை என்னைக் கேட்டார். ஆனாலும் அவரது பதில் “இல்லை” என்பதாகவே இருந்தது.

“ஆனால் நீ ஒவ்வொரு ஆண்டும் கூர்மையாகி கொண்டிருக்கிறாய், குழந்தாய்!.”

பிறகு ஒரு வருடம் எனது தாத்தா இறந்துவிட்டார். ஒவ்வொருவரும் துன்பமடைந்தார்கள். ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள். என்னுடைய தந்தையும் கூட.

தந்தை அழுவதை நான் காண்பது இரண்டாம் முறை என்றே நினைவு கூருகிறேன்.

எனது தாத்தாவுக்கு இறுதி விடை கொடுக்க வேண்டிய முறை எங்களுக்கு வந்தபோது என் தாய் என்னைக் கவனித்தார்.

பிறகு, “இப்போதாவது நமது தேகத்தின் மிக முக்கிய அங்கம் எதுவென தெரிகிறதா, என் அன்பானவனே ?” என்று கேட்டார்.

இப்போது அவர் இக்கேள்வியைக் கேட்டபோது நான்அதிர்ச்சியுற்றேன். இது எனக்கும் அவருக்கும் இடையே உள்ள ஒரு விளையாட்டு என்றே எப்போதும் எண்ணி வந்தேன்.

என் முகத்தே இருந்த குழப்பத்தைக் கண்டு கூறினார்: “இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. நீ உண்மையாகவே உன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாய் என இதுவே உணர்த்தக் கூடியது. கடந்த காலத்தில் தேகத்தின் மிக முக்கிய அங்கமாக நீ பதில் கூறுகையில், நீ தவறான பதில் கூறுகிறாய் என்றும் ஏன் என்பதற்கான உதாரணத்தையும் கூறினேன்.

ஆனால் முக்கியமான இப்பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய நாள் இதுவே.”

தாய் ஒருத்தியால் மட்டுமே காண முடிகின்ற பார்வையை என் மீது அவர் செலுத்தினார். நான் அவரது கண்கள் கண்ணீரால் நிரம்பியதைக் கண்டேன். http://demo3.esales.in:8081/ பிறகு கூறினார்:

“என் அன்பானவனே! தேகத்தின் மிகவும் முக்கிய அங்கம் தோள்களேயாம்.”

“எனது சிரத்தைத் தாங்கிக் கொண்டிருப்பதாலா?” எனக் கேட்டேன். http://demo3.esales.in:8081/

பதில் கூறினார்: “இல்லை! இது ஒரு நண்பன் அல்லது அன்புக்குரியவர்கள் கண்ணீர் விட்டு அழுகையில், அவர்களின் தலையைத் தாங்கிக் கொள்வதால். ஒவ்வொருவருமே தான் கண்ணீர் விட்டு அழுகையில் தம் தலையைச் சுமக்க தோள்களை வேண்டுபவராவர். சில நேரங்களில் நமது வாழ்வில், மகனே! நீ எப்பொழுதும் உனக்குத் தேவையான சமயத்தில் கண்ணீர் விட்டு அழுவதற்கான தோள்களைப் பெற போதிய அன்பையும் நண்பரையும் கொண்டிருப்பாய் என நான் நம்புகிறேன்.”

தேகத்தின் மிக முக்கியமான அங்கம் சுயநலமான ஒன்று அல்ல என்று அங்கே அப்போது நான் அறிந்தேன்.

“அது உங்களுக்காக அல்ல மற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இது மற்றவர்களின் துன்பத்திற்கு அனுதாபமளிப்பதாகும்.

நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் எவ்வாறு அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த உதவினீர்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்”.

நல்ல நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள்.

நீங்கள் ஒருபோதும் அவர்களைக் காண்பதில்லை. ஆனால் எப்போதும் அவர்கள் அங்குள்ளதை அறியுங்கள்.