வகுப்பு – 25 – உறவுகள்

வகுப்பு – 25 – உறவுகள்
கதை
பாலங்களைக் கட்டுதல்

ஒரு காலத்தில் அருகருகே அமைந்த நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வந்த இரண்டு சகோதரர்கள் முரண்பாடு கொள்ள நேர்ந்தது. நாற்பது ஆண்டுகளாக எவ்விதத் தடையுமின்றி இயந்திரத்தைப் பகிர்ந்து பயன்படுத்திக் கொண்டு, தேவைப் படும் பொருட்களையும் பணிகளையும் பகிர்ந்து கொண்டு அருகருகே இருந்த நிலங்களில் விவசாயம் செய்து வந்த சகோதரரிடையே முதன் முறையாக ஏற்பட்ட பிரிவு அது.

நீண்ட கால கூட்டுப் பணி முறிந்தது.

அது சிறிய ஒரு புரிந்து கொள்ளாத நிகழ்வால் ஆரம்பித்து பெரிய தொரு வேறுபாட்டால் முற்றிப் பின் கசப்பான வார்த்தைகளை வெளியிடுதலால் வெடித்து முடிவில் பலவாரங்களாக பேச்சு வார்த்தையற்ற நிலைக்குத் தள்ளியது.

ஒரு நாள் காலை அண்ணன் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அவர் கதவைத் திறந்து தம் வாயிலில் தச்சு வேலை செய்கின்ற ஒருவர் தம் கருவிப் பெட்டியுடன் நிற்கக் கண்டார். “சில நாட்களுக்கு வேலை இருக்குமா எனத்தேடி வந்திருக்கிறேன்” என்றார் அவர்.

“அநேகமாக இங்கும் அங்குமாக சிற்சில வேலைகளை தாங்கள் செய்ய வேண்டியுள்ளது. நான் உங்களுக்கு உதவ இயலுமா?” என்றார். “ஆமாம்!” என்றார் அண்ணன்.

“தங்களுக்கான வேலை உள்ளது என்னிடம். சிற்றோடையின் வழியே அந்த நிலத்தைப் பாருங்கள். உண்மையில் என்னுடைய தம்பிதான் பக்கத்து நிலத்தின் சொந்தக்காரராவார். போன வாரம் எங்களுக்கிடையில் வைக்கோல் காய வைப்பதற்கான நிலம் இருந்தது. அவர் புல்டோஸரைக் கொண்டு வந்து ஆற்றின் கரையை உயர்த்திக் கொண்டார். இப்போது எங்களுக்கிடையே ஒரு ஓடை அமைந்துவிட்டது. நல்லது, அவர் என் மீது கொண்ட பகையினால் இதைச் செய்திருக்கலாம். ஆனால் இதையும் விட ஒருபடி மேலே நான் செய்யப் போகிறேன். பிரயோசனமின்றி தானியக் கிடங்காக உள்ள அந்த இடத்தைப் பாருங்கள். நான் அவருடைய நிலத்தை ஒருபோதும் காணத் தேவையில்லாதவாறு எட்டு அடி உயரம் கொண்ட வேலி ஒன்றை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். எவ்வாறாவது அவரை அமைதி கொள்ளச் செய்யுங்கள்” என்றார்.

தச்சு வேலைக்காரர், “இந்த சூழ்நிலை எனக்குப் புரிகிறதாக எண்ணுகிறேன். ஆணிகளையும் கம்பம் இறக்க வேண்டி துளை இடுவதையும் காண்பியுங்கள். உங்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் வேலையை முடிப்பேன்” என்றார். அன்றைய தினம் அண்ணன் தச்சருக்குத் தேவையான பொருட்களைப் பெற உதவிய பிறகு பொருட்களை நகரத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் புறப்பட்டார். தச்சு வேலை செய்பவர் அன்று முழுவதும் அளந்து கொண்டும் வாள் கொண்டு அறுத்துக் கொண்டும் ஆணிகள் அடித்துக் கொண்டும் இருந்தார். மாலை நேரத்தில் அண்ணன் திரும்பி வந்தபோது தச்சர் தனது வேலையை முடித்து விட்டிருந்தார். விவசாயியின் கண்கள் அகல விரிந்தன! ஆச்சரியத்தால் வாய் பிளந்தது! அங்கு வேலி என்று ஏதுமில்லை.

அது ஒரு பாலம். ஓடையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் செல்லும் வகையில் ஒரு பாலம் உருவாகியிருந்தது. அவரது பக்கத்து நிலத்துக்காரர், விவசாயியின் தம்பி ஓடையின் குறுக்கே வந்து கரங்களை நீட்டும் அளவுக்கு கை வேலைப்பாடு கொண்ட கிராதிக் கம்பிகள் மற்றும் எல்லாம் கொண்டு நேர்த்தியான பணி ஒன்று நிறைவேறியிருந்தது.

“நான் கூறிய அனைத்துக்கும் மேலாக இந்த பாலத்தை உருவாக்கி முடித்த முழுமையான நபர் நீங்கள்!” என்றார் அண்ணன்.

இரண்டு சகோதரரும் ஓடையின் இருபக்கத்திலும் நின்று பிறகு நடுவில் சென்று ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு சந்தித்தனர். அவர்கள் தச்சர் பக்கம் திரும்பி அவர் பொருட்களைத் தூக்கித் தம் தோளில் வைப்பதைக் கண்டனர்.

“இல்லை! இருங்கள்! சில நாட்கள் இங்கேயே இருங்கள். நான் உங்களுக்கு மேலும் மற்ற பல திட்டங்களைத் தர உள்ளேன்” என்றார் அண்ணன்.

“நானும் தங்கவே விரும்புகிறேன்.