வகுப்பு – 24 : உங்கள் திறமையை மேம் படுத்துங்கள்

வகுப்பு – 24 : உங்கள் திறமையை மேம் படுத்துங்கள்
கதை
மரவெட்டியின் கதை

ஒரு காலத்தில் மிக சக்தி கொண்ட மர வெட்டி ஒருவர் மர வியாபாரி ஒருவரிடம் வேலை கேட்டு வந்தார். வேலையும் கிடைத்தது. அவருக்கு நல்ல ஊதியம் கிடைத்தது. அதற்கேற்றவாறே வேலையும் கடுமையாக இருந்தது. இதனால் மரவெட்டி தனது பணியைத் திறம்பட ஆற்றவேண்டியிருந்தது.

அவரது முதலாளி இவர் பணியாற்ற வேண்டிய இடத்தைக் காண்பித்து மரத்தை வெட்ட கோடரி ஒன்றையும் கொடுத்தார். முதல் நாள் மரவெட்டி பதினெட்டு மரங்களைக் கொண்டு வந்தார்.

முதலாளி, “பாராட்டுக்கள்! இவ்வாறே பணியைத் தொடர்ந்து செய்!” என்றார். முதலாளியின் வார்த்தைகளால் உற்சாகமுற்ற மரவெட்டி மறு நாள் மிகவும் கடினமாக உழைத்தார்; ஆனால் பதினைந்து மரங்களை மட்டுமே கொண்டு வர முடிந்தது. மூன்றாம் தினம் அவர் மேலும் கடினமாக உழைத்தார்; ஆனால் இந்த முறை பத்து மரங்களையே கொண்டு வர முடிந்தது.

நாளுக்கு நாள் அவர் குறைவான மரங்களையே கொண்டு வந்தார். மரவெட்டி “நான் எனது சக்தியை இழந்து கொண்டிருக்க வேண்டும்!” என எண்ணினார். அவர் தன் முதலாளியிடம் சென்று “என்னை மன்னியுங்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை” என்றார்.

முதலாளி, “நீங்கள் கடைசியாக எப்போது கோடரியைத் தீட்டி கூர்மையாக்கினீர்கள்,” என்றார்.

“கூர்மையா! நான் எனது கோடரியைக் கூர்மைப்படுத்த நேரமே இல்லாதிருக்கிறேன். நான் மரத்தை வெட்டுவதிலேயே மும்முரமாக இருந்தேனே!”

பிரதிபலிப்பு:

நமது வாழ்க்கையும் அப்படியே! சில நேரங்களில் கோடரியை தீட்டுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளாமலேயே மும்முரமாக இருக்கிறோம். இன்றைய உலகில் ஒவ்வொருவரும் எப்போதுமில்லாத மும்முரமாக இருப்பதைப் போலவும் எப்போதுமில்லாத மகிழ்ச்சியற்று இருப்பதைப் போலவும் தெரிகிறது.http://demo3.esales.in:8081/

ஏன் அப்படி? கூர்மையாக இருப்பது எப்படி என்பதை நாம் மறந்திருக்கிறோம் என்றாகுமா?

செயல்பாடு மற்றும் கடின உழைப்பு என்பதில் எவ்வித குறைபாடுமில்லை. நமது சொந்த வாழ்க்கை, நம்மைப் படைத்தவருடன் நெருங்கியிருத்தலுக்கான நேரத்தை ஒதுக்குதல், மேலும் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குதல், இலக்கியங்களைப் படிக்க நேரம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கையின் உண்மையாகவே முக்கியமான விஷயங்களை உதாசீனப் படுத்தும் அளவிற்கு மும்முரமாகி விடக்கூடாது.