வகுப்பு – 21 – நேர்மறையானதையே எண்ணுங்கள்

வகுப்பு – 21 – நேர்மறையானதையே எண்ணுங்கள்

நேர்மறையானவர்களுடன் மட்டுமே உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள். நேர்மறையான உங்கள் கனவுகளை யாரும் சலனமின்றி அழிக்க அனுமதியாதீர். நேர்மறையானதையே எண்ணுங்கள்.

கதை

நேர்மறையானதையே எண்ணுங்கள்

ஒருகாலத்தில் சிறு தவளைகளின் குடும்பம் ஒன்று இருந்தது; அவை தமக்குள் ஓட்டப் பந்தயம் ஒன்றை நடத்த முடிவு செய்தன.

பந்தயத்தின் எல்லை யாதெனில் மிக உயரமான ஒரு கோபுரத்தின் உச்சியை அடைவதே. இந்த பந்தயத்தைக் கண்டு போட்டியாளரை உற்சாகப் படுத்த, கோபுரத்தைச் சுற்றிலும் மாபெரும் கூட்டம் கூடியது.

பந்தயம் ஆரம்பமானது. உண்மையாகவே கூடியிருந்த ஒருவர் கூட இந்த சிறு தவளைகள் கோபுரத்தின் உச்சியை அடையும் என நம்பிக்கை கொள்ளவில்லை. கூட்டத்தினர் பலவிதமாகக் கூச்சலிட்டனர்: “ஓ! இந்த வழி மிகவும் கடினமானது, இவர்கள் ஒருபோதும் உச்சியை அடையப் போவதில்லை, அவர்கள் வெற்றியடைவார்கள் என்பதற்கு வாய்ப்பே இல்லை. கோபுரமோ மிக உயரமாக இருக்கிறது” என்றெல்லாம் கருத்து தெரிவித்தார்கள்.

சிறிய தவளைகள் ஒவ்வொன்றாக கீழே விழ ஆரம்பித்தன. ஒரே ஒரு தவளை மட்டும் புதியதொரு உற்சாகத்துடன் மேலே மேலே ஏறிப் போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தினர் தொடர்ந்து ஆரவாரமிட்டனர்: “இது மிகவும் கடினம்! ஒருவரும் வெற்றி அடையப் போவதில்லை!” என்றார்கள்.

பெரும்பாலான சிறு தவளைகள் யாவும் களைப்படைந்து போய் முயற்சியைக் கை விட்டன. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் மேலே, மேலே , மேலே என்று தொடர்ந்து போய்க் கொண்டு இருந்தது. இது மட்டும் முயற்சியைக் கைவிடவில்லை. முடிவில் மற்ற ஒவ்வொரு தவளையும் கோபுரத்தின் மீது ஏறும் முயற்சியைக் கைவிட்டது.

ஒரே ஒரு சிறு தவளை மட்டும் மாபெரும் முயற்சி எடுத்துக் கொண்ட பின்பு, அது ஒன்றே உச்சியை அடைந்தது! இயல்பாகவே மற்ற சிறு தவளைகள் யாவும் இந்தத் தவளையால் மட்டும் எவ்வாறு சாதிக்க முடிந்தது என்று அறிய விரும்பின.

அதனுடன் போட்டியிட்ட ஒரு தவளை, எவ்வாறு எல்லையை அடைந்து வெற்றி பெறும் அளவுக்கு சக்தி பெற்றிருந்தது என வினவியது. வெளியே திரும்பி வந்த, வெற்றி பெற்ற அந்த தவளை காது கேளாததாக இருந்தது.

இக்கதையின் மூலமான படிப்பினை:

எதிர் மறையாகவும் குறுகிய நோக்குடனும் உள்ள மற்றவரின் சுபாவங்களை ஒருபோதும் கவனிக்காதீர்கள்! ஏனெனில் அவை யாவும் அதிசயமிக்க கனவுகள் மற்றும் விருப்பங்களை உங்களிடமிருந்து வெளியேறச் செய்து விடும்.

இங்கு கூறப்பட்ட வார்த்தைகளின் சக்தியை எப்போதும் நினைந்திருங்கள். ஏனெனில் நீங்கள் கேட்கும் அல்லது படிக்கும் ஒவ்வொன்றும் உங்கள் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன.