வகுப்பு – 20 – நேர்மறையானவராக இருங்கள்

வகுப்பு – 20 – நேர்மறையானவராக இருங்கள்
கதை
கரும் புள்ளி

ஒருநாள் பேராசிரியர் வகுப்பறைக்குள் வந்து தன் மாணவர்களிடம் ஆச்சரியமான தேர்வு ஒன்றிற்குத் தயாராகச் சொன்னார். மாணவர்கள் தேர்வு ஆரம்பிக்கப் படுவதை ஆர்வத்துடன் எதிர் நோக்கினர். பேராசிரியர் வினாத்தாள்களை அனைவரிடமும் கொண்டுவந்து கொடுத்தார்; வழக்கம் போலவே வாசகம் கீழ் நோக்கி இருந்தது. அனைவருக்கும் வழங்கப்பட்ட பிறகு பக்கத்தைத் திருப்பி பதில்களை எழுதச் சொன்னார். அனைவரும் ஆச்சரியங் கொள்ளும் வகையில் வினாக்கள் ஏதும் அங்கே இல்லை. பக்கத்தின் மையத்தில் கருப்புப் புள்ளி மட்டும் இருந்தது. ஒவ்வொருவர் முகத்திலும் காணும் வெளிப்பாடுகளைக் கொண்டு பின் வருமாறு கூறினார்.

“நீங்கள் வினாத்தாளில் காண்பவற்றை எழுதுங்கள்”.

மாணவர்கள் குழப்பமடைந்து தெளிவாகக் கூற இயலாத சாதனையை ஆரம்பித்தார்கள்

வகுப்பின் முடிவில் பேராசிரியர் எல்லா விடைத் தாள்களையும் பெற்றுக் கொண்டு ஒவ்வொன்றையும் மாணவர் முன்னிலையில் உரக்கப் படிக்கலானார்.

அனைவருமே எவ்வித வேறுபாடுமின்றி, கருப்புப் புள்ளியைப் பற்றியும் விடைத்தாளின் மையத்தில் இருப்பதைப் பற்றியுமே விளக்க முயன்று கொண்டிருந்தனர். அனைத்தும் முடிந்த பிறகு பேராசிரியரே விளக்கமளித்தார்.