வகுப்பு 2 – படைத்தவர்

வகுப்பு 2 – படைத்தவர்
ஒரு கண்ணாடிக் குவளையில் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். ஒரு குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கீழ் வரும் கேள்விகளைக் கேளுங்கள். என் கரத்தில் உள்ளது என்ன? இந்த குச்சி எந்த அளவு நீளமாக உள்ளது? எவ்வாறு தோற்றமளிக்கிறது? அது நேராக இருக்கிறதா அல்லது முறிந்தாற் போல உள்ளதா? (குரு தம்முடன் இருந்த குச்சியை கண்ணாடிக் குவளையில் உள்ள நீரில் வைக்கிறார்.) இப்போது குச்சி எவ்வாறு தோன்றுகிறது? குழந்தைகள்: குச்சி வளைந்து காணப்படுகிறது. குரு குச்சியை வெளியே எடுத்து விட்டு மீண்டும் கேட்கிறார். இப்போது குச்சி எவ்வாறு தோன்றுகிறது? குழந்தைகள்: இப்போது குச்சி நேராகத் தோன்றுகிறது. இந்த பரிசோதனை எதை நிரூபிக்கிறது? நமது கண்கள் எப்போதும் சரியான தோற்றத்தைத் தருவதில்லை. இது போல வேறு உதாரணம் காண்பிக்க இயலுமா? குழந்தைகள் பதில் கூற இயலாவிடில் குரு கூறுகிறார்: நாம் தொடர் வண்டியில் பயணம் செய்யும் போது மரங்கள் நகர்ந்து செல்வதைப் போல தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் நகர்ந்து செல்வது தொடர் வண்டியே! மரங்களல்ல! ஆக நாம் “நம்பிக்கை என்பதற்கு அறிவே அடித்தளமாகிறது.” என முடிக்கிறோம். நாம் நம் கண்களால் கடவுளைக் காண்பதில்லை. ஆனால் கடவுள் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் உறைந்திருக்கிறார் என்பதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.

பாடல்
இறைவன் அனைத்தையும் தம்முள் கொண்டவர்

சூரியனையும் சந்திரனையும் கரங்களில் ஏந்தியவர்(3)
அகிலமனைத்தையும் தம் கைவரப் பெற்றவர்
காற்றையும் மழையையும் கரங்களில் ஏந்தியவர்(3)
அகிலமனைத்தையும் தம் கைவரப் பெற்றவர் மலர்களையும் கனிகளையும் கரங்களில் ஏந்தியவர்…. மலைகளையும் நதிகளையும் கரங்களில் ஏந்தியவர்… தாழ்ந்தவரையும் உயர்ந்தவரையும் கரங்களில் ஏந்தியவர்… வன்மையையும் மென்மையையும் கரங்களில் ஏந்தியவர்…